Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் – அறிகுறிகள் என்ன? தவிர்ப்பது எப்படி?

Liver Damage in Kids : பெரியவர்களுக்கு ஏற்படுவது போல குழந்தைகளுக்கும் கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மரபணு காரணமாகவும் தவறான உணவுப் பழக்கத்தின் காரணமாகவும் அவர்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டால் தோன்றும் அறிகுறிகள் என்ன ? எவ்வாறு தற்காத்துக்கொள்வது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் – அறிகுறிகள் என்ன? தவிர்ப்பது எப்படி?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 09 Jun 2025 22:37 PM

இப்போதெல்லாம் மாறிவரும் வாழ்க்கை முறை (Lifestyle), தவறான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மரபணு காரணங்களால், பெரியவர்கள் மட்டுமல்ல, சிறு குழந்தைகளும் கல்லீரல் (Liver) தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கல்லீரல் என்பது மிகவும் சிக்கலான உறுப்பு. உடலின் மற்ற உறுப்புகளைப் போல கல்லீரல் பிரச்னை அவ்வளவு எளிதில் வெளியே தெரியாது. இதன் காரணமாக மருத்துவர்கள் 6 மாதத்துக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டியது அவசியம் என அறிவுறுத்துகிறார்கள். அந்த வகையில் சமீப காலமாக குழந்தை கல்லீரல் நோய் என்ற பாதிப்பு குழந்தைகளுக்கு மிகுந்த ஆபத்தானதா மாறி வருகிறது. . குழந்தைகளின் கல்லீரல் எவ்வாறு சேதமடைகிறது என்பதை மருத்துவரின் விளக்கங்களை வைத்து தெரிந்துகொள்ளலாம்.  குழந்தைகளின் கல்லீரல் நோய் என்றால் என்ன அதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

குழந்தைகளில் கல்லீரல் நோய் அரிதாகவே காணப்படுகிறது, ஆனால் கல்லீரல் நோய் குழந்தைகளின் கல்லீரலை மிகவும் பாதிக்கக் கூடும். இது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவத் துறையின் மருத்துவர் ராகேஷ் குமார் பாக்டி, இந்தப் பிரச்னைகள் குழந்தைகள் பிறப்பு முதல் இளமைப் பருவம் வரை குழந்தைகளுக்கு ஏற்படலாம். இது ஒரு தனி நோய் அல்ல, மாறாக பல வகையான கல்லீரல் தொடர்பான பிரச்னைகளின் தொகுப்பாகும். இது குழந்தைகளின் கல்லீரலை படிப்படியாக சேதப்படுத்துகிறது.

அமெரிக்க கல்லீரல் அறக்கட்டளையின் கூற்றுப்படி, கொழுப்பு கல்லீரல் நோய் (ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல்), வைரஸ் ஹெபடைடிஸ் (ஹெபடைடிஸ் ஏ, பி, சி), ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ், வளர்சிதை மாற்ற கல்லீரல் நோய் ஆகியவை கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய சில நோய்களாகும்

குழந்தைகளுக்கு இந்த கல்லீரல் நோய் ஏன் ஏற்படுகிறது?

குழந்தைகளில் கல்லீரல் பாதிப்புக்கு பல காரணங்கள் இருக்கலாம் என்று டாக்டர் ராகேஷ் குமார் விளக்குகிறார். பிறப்பிலிருந்தே கல்லீரலின் கட்டமைப்பில் ஏற்படும் குறைபாடுகள், மரபணு அல்லது பரம்பரை பிரச்னைகள், வைரஸ் தொற்றுகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் முறையற்ற செயல்பாடு மற்றும் கொழுப்பு அல்லது சர்க்கரை நிறைந்த உணவுகளை உண்ணுதல் போன்ற காரணங்களால் இந்தப் பிரச்னை மேலும் அதிகரிக்கிறது. இருப்பினும், நோய் வந்த பிறகு, குழந்தையிடம் சில அறிகுறிகள் தோன்றும், அவற்றைப் புறக்கணிக்கக்கூடாது.

குழந்தைகளுக்கான கல்லீரல் நோயின் அறிகுறிகள்

குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்பட்டால், எடை சரியாக அதிகரிக்கவில்லை என்றால், அல்லது அடிக்கடி வாந்தி எடுத்தால், அது கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தவிர, தோல் அல்லது கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் (மஞ்சள் காமாலை), வயிறு வீங்குதல், அடர் நிற சிறுநீர், அடர்த்தி குறைவாக மலம் வெளியேறுதல், சோர்வு மற்றும் பலவீனம் மற்றும் பசியின்மை ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தோன்றியவுடன் மருத்துவரை அணுகுவது முக்கியம்.

குழந்தையின் அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவர்கள் சில பரிசோதனைகளைச் செய்கிறார்கள் என்று டாக்டர் ராகேஷ் விளக்குகிறார். மரபணு நோயின் சந்தேகம் இருந்தால், இரத்தப் பரிசோதனைகள், அல்ட்ராசவுண்ட் அல்லது சிடி ஸ்கேன், பயாப்ஸி போன்ற மரபணு சோதனைகள மூலம் இந்த நோய் கண்டறியப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்தில் தடுப்பூசி மற்றும் ஊட்டச்சத்து பெற வேண்டும், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை சரியான நேரத்தில் போட வேண்டும், குழந்தைக்கு சரியான ஆரோக்கியமிக்க உணவைக் கொடுக்க வேண்டும், எண்ணெய் மற்றும் ஜங்க் ஃபுட் உணவுகளை அவர்களுக்கு அளிக்காமல் பாதுகாக்க வேண்டும்.  அவ்வப்போது பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...