Sugar Free: முற்றிலும் சர்க்கரையை ஒதுக்குறீர்களா? உடலில் இந்த மாற்றங்கள் நிகழும்!
Sugar Free is Good For Health: சர்க்கரை நோயாளிகளாக (Diabetic patient) இருந்தாலும் சரி, எடை குறைக்க முயற்சிப்பவர்களாக இருந்தாலும் சரி, அனைவரும் சர்க்கரை இல்லாத பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில், சர்க்கரையை முற்றிலும் நிறுத்துவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்வோம்.

சர்க்கரை நிறுத்தம்
இன்றைய நவீன வாழ்க்கையில் பலரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மருத்துவரின் ஆலோசனைகள் இல்லாமல் சில உணவு விஷயங்களை மேற்கொள்கிறார்கள். உடற்பயிற்சி செய்பவர்கள், உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் தங்கள் உணவில் முற்றிலும் சர்க்கரையை தவிர்க்கிறார்கள். இப்போதெல்லாம், சர்க்கரையை (Sugar) தவிர்க்க சர்க்கரை இல்லாத பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். சர்க்கரை நோயாளிகளாக (Diabetic patient) இருந்தாலும் சரி, எடை குறைக்க முயற்சிப்பவர்களாக இருந்தாலும் சரி, அனைவரும் சர்க்கரை இல்லாத பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில், சர்க்கரையை முற்றிலும் நிறுத்துவதால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: கீரையை எப்போது சாப்பிடக்கூடாது..? எவ்வளவு நேரம் சமைப்பது நல்லது..?
வயிற்று ஆரோக்கியம்:
சர்க்கரை இல்லாத உணவுகளை அதிகமாக சாப்பிடுவது உங்கள் செரிமானத்தை சீர்குலைக்கும். இவற்றில் உள்ள இனிப்புகள் கல்லீரலின் இயற்கையான பாக்டீரியாக்களுக்கு தீங்கு விளைவிக்கும். இது செரிமானத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், வீக்கம் அல்லது வாயுவையும் ஏற்படுத்தும்.
பசி அதிகரிக்கலாம்:
செயற்கை இனிப்புகள் சாப்பிடுவது மூளையை சில நேரங்களில் குழப்பம் அடைய செய்யும். நீங்கள் செயற்கை இனிப்புகளை அதிக அளவில் உட்கொள்ளும்போது, மூளை உண்மையான சர்க்கரையைப் பெறுவதாக நினைக்கிறது. ஆனால் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்காதபோது, அது அதிக இயற்கையான இனிப்புகள் வேண்டும் என ஏங்க தொடங்குகிறது.
தலைவலி மற்றும் எரிச்சல்:
உங்களுக்கு இயற்கை இனிப்புகளை எடுக்க பிடிக்கவில்லை என்றாலும், அவ்வபோது எடுத்து கொள்வது முக்கியம். அதாவது செயற்கை இனிப்புகளை அதிகமாக சாப்பிடுவது தலைவலியை கூட ஏற்படுத்தும். சில நேரங்களில் தலைவலியுடன் கூடிய எரிச்சலையும் தரலாம். செயற்கை இனிப்புகளில் நரம்பியல் எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் உள்ளன.
எடை அதிகரிக்கலாம்:
பலரும் எடை அதிகரிப்பு காரணமாக விரைவாக எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன்படி, பெரும்பாலான மக்கள் எடையைக் குறைக்க சர்க்கரை இல்லாத பொருட்களை முதல் தேர்வாக எடுத்து கொள்கிறார்கள். ஆனால் இ தவறு மேலும் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
ALSO READ: பப்பாளியை இவர்கள் சாப்பிட வேண்டாம்..! அடுக்கடுக்கான பிரச்சனையை தரும்..!
இன்சுலின் எதிர்ப்பு ஆபத்து:
சர்க்கரை இல்லாத உணவுகளை உட்கொள்வது உங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்காது என்று நீங்கள் நினைத்தால், அது ஒரு தவறான கருத்து. சர்க்கரை இல்லாத உணவுகள் உடலின் இன்சுலின் அளவையும் பாதிக்கும்.