Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: வெங்காயம் உணவில் ஒரு அங்கம்! சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் என்ன நடக்கும்?

Benefits of Onions: ஒரு மாதத்திற்கு வெங்காயம் சாப்பிடவில்லை என்றால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும், இதனால் நீங்கள் சோர்வாகவும் பலவீனமாகவும் உணருவீர்கள். வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய நன்மைகள் உள்ளன. அதாவது, வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

Health Tips: வெங்காயம் உணவில் ஒரு அங்கம்! சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் என்ன நடக்கும்?
வெங்காயம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 06 Nov 2025 15:58 PM IST

இந்திய காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்கள் உலகளவில் மிகவும் பிரபலமானவை. இவை சுவைக்காக மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களை குணப்படுத்தும் திறனுக்காகவும் பெயர் பெற்றவை. இத்தகைய காய்கறிகளில் வெங்காயம் மிக முக்கியமானது. வெங்காயமானது இந்தியாவில் சமையல் மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆயுர்வேதமும் வெங்காயத்தை ஆரோக்கியத்திற்கு (Health) மிகவும் நன்மை பயக்கம் என்று கூறுகிறது. சிலர் மத காரணங்களுக்காக வெங்காயம் (Onions) சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். ஆனால் வெங்காயம் சாப்பிடாமல் இருப்பது உடலில் பல விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை பற்றி தெரிந்து கொள்வோம்.

வெங்காயத்தில் ஃபோலேட் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை நம் உடலுக்கு நன்மை பயக்கும். வெங்காயத்தை மிதமாக மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி பிரச்சனையை சரிசெய்யும். இதிலுள்ள அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் உங்கள் உடலில் வீக்கத்தை குறைக்க உதவி செய்யும். இதில் அல்லிசின் மற்றும் குர்செடின் போன்ற கூறுகள் உள்ளன. இந்த கூறுகள் புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கின்றன. வெங்காயத்தை தொடர்ந்து உட்கொள்வது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். வெங்காயத்தில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியமும் உள்ளது.

ALSO READ: காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் ஆரஞ்சு ஜூஸ்.. 6 அற்புதமான நன்மைகளை அள்ளி தரும்!

நோய் எதிர்ப்பு சக்தி:

ஒரு மாதத்திற்கு வெங்காயம் சாப்பிடவில்லை என்றால், உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும், இதனால் நீங்கள் சோர்வாகவும் பலவீனமாகவும் உணருவீர்கள். வெங்காயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய நன்மைகள் உள்ளன. அதாவது, வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது பருவகால தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவி செய்யும். வெங்காயத்தில் குர்செடின் மற்றும் சல்பர் கலவைகள் உள்ளன. இவை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். அதன்படி, நீங்கள் வெங்காயத்தை சாப்பிடாதபோது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வெங்காயத்தில் உள்ள ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகின்றன. இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இதய நோய் அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது. இதுபோன்ற சூழலில், வெங்காயத்தை சாப்பிடாமல் விட்டால் இதய பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கலாம்.

ALSO READ: அவகேடோ ஒரு சூப்பர் புட்.. ஆனா! யார் யாருக்கெல்லாம் தொல்லை..? எவ்வளவு சாப்பிடுவது நல்லது?

நீங்கள் வெங்காயத்தை சாப்பிடாதபோது உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்க தொடங்கும். இதனால், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். வெங்காயத்தில் அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை மூட்டுவலி மற்றும் கால் வலியை போக்க உதவுகின்றன. இவை உடலில் யூரிக் அமில அளவை குறைக்கவும் உதவும்