உங்களுக்கு 30 வயதிற்கு மேல் ஆகிறதா? அப்போ இந்த பரிசோதனைகளை கட்டாயம் பண்ணுங்க!
Essential Health Checkup : இளமையாக இருப்பது போல தோன்றினாலும், 30 வயதுக்கு பிறகு இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் போன்ற பல பிரச்னைகள் சத்தமில்லாமல் ஆரம்பிக்கின்றன. மருத்துவர்கள் பரிந்துரைப்பது படி, இரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, தைராய்டு, வைட்டமின் டி மற்றும் பி12, சிறுநீரக, கல்லீரல், மற்றும் புற்றுநோய் பரிசோதனைகளை ஆண்டுக்கு ஒருமுறை செய்து கொள்வதன் மூலம் எதிர்கால நோய்களைத் தடுக்க முடியும்.

வாழ்க்கை முறை மாற்றத்தின் (Lifestyle) காரணமாக இப்போதெல்லாம் இளம் வயதிலேயே பலரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் 30 வயதில், பலர் தாங்கள் இன்னும் இளமையாகவும், முன்பு இருந்ததைப் போலவே ஃபிட்டாகவும் இருப்பதாக உணர்கிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. ஏனென்றால் இந்த வயதிலிருந்தே இரத்த அழுத்தம் (Blood Pressure), சர்க்கரை (Blood Sugar), தைராய்டு, கொலஸ்ட்ரால் போன்ற பிரச்னைகள் சத்தமில்லாமல் உடலில் நுழையத் துவங்குகின்றன. இதனை ஆரம்பத்திலேயே கண்டறியப்படாவிட்டால், அவை நாள்பட்ட நோய்களாக மாறக்கூடும். அதனால்தான் அனைவரும் வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நீங்கள் எவ்வளவு உடல் தகுதியுடன் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து மருத்துவரைப் பார்ப்பதற்கான நேரம் மாறுபடும். பொதுவாக, ஆரோக்கியமான மக்கள் வருடத்திற்கு ஒரு முறை மருத்துவரைப் பார்த்தால் போதும். ஆனால் அதிக எடை கொண்டவர்கள், குடும்பத்தில் உடல்நலப் பிரச்னைகள் உள்ளவர்கள் அல்லது அதிக மன அழுத்தத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது. குறிப்பாக பெண்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இப்போது தவறாமல் செய்ய வேண்டிய மருத்துவ பரிசோதனைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.
இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு
இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது சரிபார்க்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் யாருக்காவது நீரிழிவு நோய் இருந்தால், நீங்கள் இந்தப் பரிசோதனையை அடிக்கடி செய்து கொள்ள வேண்டும்.




இதையும் படிக்க: இந்த காய்கறி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் – சமீபத்திய ஆய்வில் தகவல்
கொழுப்பு பரிசோதனை
உங்கள் கெட்ட கொழுப்பு (LDL), நல்ல கொழுப்பு (HDL) மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைப் பரிசோதிக்க மறக்காதீர்கள். இது வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டிய சோதனை.
கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடு
வலி நிவாரணிகளை அதிகமாகப் பயன்படுத்துவது, மது அருந்துவது, அதிகப்படியான உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சேதப்படுத்தும். அதனால்தான் வருடத்திற்கு ஒரு முறை இந்தப் பரிசோதனைகளைச் செய்வது நல்லது.
இதையும் படிக்க: புரோட்டீன் பவுடரால் ஆபத்தா? எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி?
தைராய்டு ஹார்மோன்கள்
உங்களுக்கு சோர்வு, எடை அதிகரிப்பு அல்லது இழப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால், உங்களுக்கு தைராய்டு பிரச்னை இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த சோதனைகள் ஒவ்வொரு ஆண்டும் செய்யப்பட வேண்டும்.
வைட்டமின் டி, பி12
இந்தியர்களிடையே வைட்டமின் டி குறைபாடு மற்றும் பி12 குறைபாடு மிகவும் பொதுவானது. இது எலும்புகள் பலவீனமடைதல், மனநலக் கோளாறுகள் மற்றும் மூளையின் செயல்பாட்டைக் குறைத்தல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். இந்தப் பரிசோதனைகள் வருடத்திற்கு ஒரு முறை செய்யப்பட வேண்டும்.
புற்றுநோய் பரிசோதனை
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் ஒருமுறை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை மற்றும் மார்பகப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஆண்கள் புரோஸ்டேட் சுரப்பி பரிசோதனைகளை மேற்கொள்வதும் முக்கியம். முதுமை வரை காத்திருப்பதை விட, இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதே உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சிறந்த வழியாகும்.
மருத்துவ பரிசோதனைகள் பயப்பட தேவையில்லை. அவை நம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறியக்கூடிய உதவுகின்றன. நம் உடலில் என்ன பிரச்னை இருக்கிறது என பார்த்தால் தெரியாது. அதனை சில அறிகுறிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதனால்தான் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அலட்சியமாக இல்லாமல் உடல் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ்வதை உறுதி செய்துகொள்ளலாம்.