சிம்பிளான டயட்… 3 மாதங்களில் 18 கிலோ எடை குறைத்த பெண் – சீக்ரெட் என்ன தெரியுமா?
Weight Loss Journey : பலர் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிரார்கள். சரியான பழக்கங்களைக் கடைப்பிடித்தால், விரைவாக எடையைக் குறைக்கலாம். இந்த நிலையில் ஒரு பெண் மூன்று மாதங்களில் 18 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உடல் எடையைக் குறைப்பது பலருக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால், உடல் பருமன் (Body Weight) பிரச்னை அதிகரித்து வருகிறது. பலர் எடையைக் குறைக்க பல்வேறு உணவுமுறைகள் மற்றும் பயிற்சிகளைச் செய்கிறார்கள். இருப்பினும், எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காததற்கு பல காரணங்கள் உள்ளன. சரியான உணவை உண்ணாதது, உடற்பயிற்சிகளை சரியாகச் செய்யாதது மற்றும் கெட்ட பழக்கங்கள் இதில் அடங்கும். சிலர் விரைவாக எடை குறைக்கிறார்கள். இந்த நிலையில் 3 மாதங்களில் 18 கிலோ எடைக்குறைத்திருப்பதாக இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஒரு சிலர் தங்கள் உடற்பயிற்சி பயணத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் மற்றவர்களையும் ஊக்குவிக்கிறார்கள். அத்தகைய ஒரு பெண் வெறும் 12 வாரங்களில் 18 கிலோ எடையைக் குறைத்து செய்திகளில் இடம்பிடித்தார். தனது உணவில் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்து இந்த நிலையை அவர் அடைந்திருக்கிறார்.




இதையும் படிக்க : Fruits In Pregnancy: கர்ப்ப காலத்தில் ஏன் இந்த 8 பழங்களை தவிர்க்கக்கூடாது..? பிரபல மருத்துவர் விளக்கம்!
3 மாதங்களில் 18 கிலோ குறைத்த பெண்
ரீத் கவுர் என்ற பெண் உடல் எடையைக் குறைக்க பல வழிகளைத் தேடுபவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக மாறிவிட்டார். இன்ஸ்டாகிராமில் உடற்பயிற்சி குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் ரீத், ஒரு வீடியோவில், ஒரே ஒரு பழக்கத்தின் மூலம் 12 வாரங்களில் 18 கிலோ எடையைக் குறைத்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், “நீங்கள் விரைவாக எடையைக் குறைக்க விரும்பினால், நீங்கள் ஒரு கலோரி பற்றாக்குறையில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார். இதன் பொருள் நீங்கள் உட்கொள்வதை விட அதிக கலோரிகளை குறைக்க வேண்டும்.
உடல் எடை குறைப்பது குறித்து பெண்ணின் இன்ஸ்டா பதிவு
View this post on Instagram
ரீத்தின் பரிந்துரைக்கப்பட்ட உணவு மாற்றங்கள்
ரீத்தின் கூற்றுப்படி, அதிக கலோரி உணவுகளுக்குப் பதிலாக, பழங்கள், காய்கறிகள் மற்றும் சூப்கள் போன்ற அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எடை இழப்புக்காக அவர் தனது உணவில் சேர்த்த சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.
நார்ச்சத்துள்ள உணவுகள்
பருப்பு வகைகள், சிறு தானியங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இவை செரிமானத்திற்கு உதவுகின்றன. அவை வயிறு நிரம்பிய உணர்வைத் தருகின்றன.
இதையும் படிக்க : தலைவலியுடன் இந்த 5 அறிகுறிகளா..? உடனடியாக மருத்துவரை நாடுங்கள்..!
குறைந்த கலோரி உணவுகள்
கீரைகள், சாலடுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இவை வயிற்றை நிரப்பவும், கலோரி பற்றாக்குறையை பராமரிக்கவும் உதவுகின்றன.
இந்த உணவுமுறை மாற்றங்கள் மூலம், அவர் தனது உடல் எடையை கணிசமாகக் குறைக்க முடிந்தது. இந்த எளிய ஆனால் பயனுள்ள மாற்றங்கள் எடை இழக்க விரும்புவோருக்கு ஒரு புதிய வழியைக் காட்டுகின்றன. சரியான உணவுமுறை மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம், நீங்களும் ரீத் போன்ற அற்புதமான முடிவுகளை அடைய முடியும்.