Health Tips: தலைவலியில் இத்தனை வகைகளா..? மன அழுத்தமும் தலையில் வலியை கொடுக்குமா?
Headache Reasons: தலையின் முன்புறம், கழுத்தின் பின்புறம் அல்லது தலையின் பின்புறம் ஏற்படுவது பதற்றமான தலைவலிகள் எனப்படும். பெரும்பாலானோர் நவீன வாழ்க்கை முறை காரணமாக தினம் தினம் இதை அனுபவிக்கிறார்கள். இந்த வலி லேசானது முதல் மிதமானது வரை அதிகரிக்க தொடங்கும்.

தலைவலி வகைகள்
எந்த வகையான தலைவலியாக (Headache) இருந்தாலும், பெரும்பாலான மக்கள் அவற்றை ஒரே தலைவலி என்று நினைக்கிறார்கள். ஆனால், தலைவலிகளில் 5 வகைகள் உள்ளன. பொதுவாகவே, காலையில் (Morning) தலைவலி ஏற்படுவது பொதுவானது. இது ஒரு சிலருக்கு வருடத்திற்கு ஒரு முறையும், மற்றவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை ஏற்படுகிறது. ஆனால் ஒவ்வொரு தலைவலியும் ஒரே மாதிரியாக இருக்காது. சில நேரங்களில் அது லேசாகவும், சில நேரங்களில் இது கடுமையான ஒற்றைத் தலைவலியாகவும் ஏற்படலாம். தலைவலியின் வகை அது ஒரு பொதுவான தலைவலியா அல்லது ஒரு அடிப்படை பிரச்சனையின் அறிகுறியா என்பதை தெரிந்து கொள்வோம்.
பதட்டத்தினால் ஏற்படும் தலைவலி:
தலையின் முன்புறம், கழுத்தின் பின்புறம் அல்லது தலையின் பின்புறம் ஏற்படுவது பதற்றமான தலைவலிகள் எனப்படும். பெரும்பாலானோர் நவீன வாழ்க்கை முறை காரணமாக தினம் தினம் இதை அனுபவிக்கிறார்கள். இந்த வலி லேசானது முதல் மிதமானது வரை இருக்கும். மேலும், தலையின் இருபுறமும் ஏற்படும். கழுத்து விறைப்பு மற்றும் உச்சந்தலையில் அழுத்தம் போன்றவையும் ஏற்படலாம். இந்த தலைவலியால் குமட்டல் அல்லது ஒளி உணர்திறன் ஆகியவற்றை ஏற்படுத்தாது. இது பெரும்பாலும் மன அழுத்தம், மொபைல் மற்றும் லேப்டாப் திரையை பார்த்தல் மற்றும் உணவைத் தவிர்ப்பதால் ஏற்படுகிறது.
ALSO READ: அடிக்கடி மறந்துவிடுகிறதா..? நினைவாற்றலை அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்!
ஒற்றைத் தலைவலி:
ஒற்றைத் தலைவலி என்பது தலையின் ஒரு பக்கத்தில் 4 முதல் 72 மணி நேரம் வரை கடுமையான வலியை தரும் ஒரு வகையாகும். இவை குமட்டல், வாந்தி மற்றும் ஒளி, ஒலி மற்றும் வாசனைக்கு உணர்திறன் ஆகியவற்றை ஏற்படுத்தும். ஒற்றை தலைவலி வருவதற்கு ஹார்மோன் மாற்றங்கள், சாக்லேட் அல்லது சீஸ் போன்ற உணவுகள், தூக்கமின்மை, வானிலை மற்றும் மன அழுத்தம் ஆகியவை ஒற்றைத் தலைவலியைத் தூண்டும்.
கொத்து தலைவலி:
கொத்து தலைவலி (Cluster Headache) திடீரெனத் தொடங்கி கண் அல்லது அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான, எரியும் வலியை ஏற்படுத்தும். இந்த வலி 15 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை நீடிக்கும். இந்த நேரத்தில், கண்களில் நீர் வடிதல், மூக்கில் நீர் வடிதல், கண் இமைகளில் எரிச்சல் போன்றவை அடிக்கடி ஏற்படும். இவை ஒரு நாளைக்கு பல முறை ஏற்படலாம் மற்றும் வாரக்கணக்கில் நீடிக்கும். 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் இவை பொதுவாக ஏற்படும்.
சைனஸ் தலைவலி:
சைனஸ் தலைவலி கன்னம், நெற்றி அல்லது மூக்கின் எலும்புக்கு அருகில் ஆழமான வலியை ஏற்படுத்துகிறது. இது குனிந்தால் இன்னும் அதிக வலியை தரும். அவற்றுடன் அடர்த்தியான மூக்கு சளி, முக அழுத்தம் மற்றும் காய்ச்சல் ஆகியவையும் இருக்கலாம். அவை பெரும்பாலும் சளி அல்லது ஒவ்வாமை என்று தவறாகக் கருதப்படுகின்றன. காலையில் வலி மோசமாகி, பகலில் குறையும்.
தண்டர் க்ளாப் தலைவலி:
தண்டர் க்ளாப் தலைவலி (Thunderclap Headache) திடீரெனவும் கடுமையாகவும் ஏற்படும். இந்த வலி சில நொடிகளில் உச்சத்தை அடைந்து ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும். இது மூளையில் இரத்தப்போக்கு, உடைந்த இரத்த நாளம் அல்லது உயர் இரத்த அழுத்தத்தைக் குறிக்கலாம். இது மருத்துவ அவசரநிலையாகக் கருதப்படுகிறது.
ALSO READ: மாரடைப்பு வருவதற்கு கொழுப்புதான் காரணமா..? குளிர்காலத்தில் ஹார்ட் அட்டாக் ஏன் வருகிறது..?
ஒவ்வொரு தலைவலியையும் புறக்கணிப்பது நல்ல யோசனையல்ல. தலைவலி அடிக்கடி, கடுமையானதாக இருந்தால், நீங்கள் நிச்சயமாக ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும். ஆரம்பகால நோயறிதல் மற்றும் சிகிச்சையானது கடுமையான சிக்கல்களைத் தடுக்கலாம்.