அடிக்கடி மாறும் காலநிலை – ஏசியிலேயே இருப்பது உடல்நிலைக்கு ஆபத்தா? மருத்துவர் எச்சரிக்கை
AC Health Risks: நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மழை வெயில் என மாறி மாறி வருகிறது. இந்த நிலையில் ஏசியிலேயே அதிக நேரம் இருப்பது மக்களுக்கு உடல் நிலை பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர் எச்சரிக்கின்றனர். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
கடந்த சில காலமாகவே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வானிலை மிக வேகமாக மாறி வருகிறது. கடும் வெப்பம் இடையிடையே மழை என வானிலை நிலவரங்கள் மாறி மாறி வருகின்றன. ஆனால் மக்கள் வீடுகள் அலுவலகங்கள் என ஏசியிலேயே நீண்ட நேரம் இருக்கும் நிலை இருக்கிறது. குறிப்பாக பல வீடுகளில் மக்கள் இரவு முழுவதும் ஏசியை ஓடவிட்டபடியே தூங்கும் பழக்கத்தை கொண்டிருக்கின்றனர். மேலும் பகல் நேரங்களிலும் அவர்களுக்கு ஏசி தேவைப்படுகிறது. இது உடலின் வெப்பத்தை பாதிக்கப்படுவதுடன் உடல் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அறைக்கு உள்ளேயும், வெளியேவும் நிலவும் மாறுபட்ட வெப்ப நிலை காரணமாக நம் உடல்நலனை பாதிக்கிறது. அடிக்கடி மாறி வரும் வெப்ப நிலையை ஏற்றுக்கொள்ள நம் உடல் சிறிது காலம் எடுத்துக்கொள்வது தான் இதற்கு காரணம்.
ஏசியிலேயே இருப்பதனால் ஏற்படும் பாதிப்புகள்
டெல்லியை சேர்ந்த டாக்டர் அஜய் குமார் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, ஏசி வசதி கொண்ட சூழலில் நீண்ட நேரம் செலவிடுவது, உடலின் இயல்பான வெப்பச் சமநிலையைச் சீர்குலைக்கக்கூடும். இது தொண்டை வறட்சி, சரும வறட்சி மற்றும் கண்களில் எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பலரும் தலைவலி, மயக்கம் மற்றும் உடல் சோர்வு போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். இது பிற்காலத்தில் அவர்களின் பணியையும் பாதிக்கக்கூடும். மேலும், குளிர்ந்த காற்று நிறைந்த சூழலில் நீண்ட நேரம் செலவிடுவது, தசை இறுக்கம் மற்றும் மூட்டு வலிகளை மேலும் தீவிரப்படுத்தக்கூடும்.
இதையும் படிக்க : செரிமான பிரச்சனை.. அதீத வயிற்றுவலி.. இவை புற்றுநோய்க்கான அறிகுறியா?
சிலருக்கு மீண்டும் மீண்டும் சளி மற்றும் இருமல் தொல்லைகளும் ஏற்படத் தொடங்கலாம். கூடுதலாக, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும். இதனால் ஒருவர் சிறிய அளவிலான உடல்நலக்குறைவுகள் ஏற்படாலம். இதன் விளைவாக, உடல் சோர்வாகவும் பலவீனமாகவும் உணரத் தொடங்கும். எனவே, ஏசியை மிதமான முறையில் பயன்படுத்துவதும், உங்கள் உடல் வெளிப்படுத்தும் எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்காமல் இருப்பதும் மிக அவசியமாகும்.
இதையும் படிக்க : Diet for Fertility: கருவுறுதலுக்கு திட்டமிடுகிறீர்களா..? இந்த உணவுகளை எடுத்தால் பலன் கிடைக்கும்!
இது குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்கு அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என அவர் தெரிவிக்கிறார். மற்றவர்களைக் காட்டிலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் பலவீனமாக இருக்கும். மேலும் சுவாச பிரச்னைகள், ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அவர் எச்சரித்தார். காரணம் ஏசியில் நீண்ட நேரம் இருப்பதால் அவர்களின் உடல் நிலையை மேலும் மோசமாக்கலாம்.