Health Tips: நகங்கள் இந்த நிறமாக மாறுகிறதா..? எச்சரிக்கும் மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி!
Nutrient Deficiencies: நகங்களில் ஏற்படும் இந்த மாற்றங்கள் ஊட்டச்சத்து (Nutrition) குறைபாடுகளைக் குறிக்கும் என மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, நகங்களில் தோன்றும் எந்த மாதிரியான மாற்றங்களில் உடலில் எந்த ஊட்டச்சத்து குறைப்பாட்டை குறிக்கும் என்பது பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.

நகங்கள் நம் கைகளின் அழகை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியம் பற்றிய முக்கியமான விஷயங்களை கூறும். நகங்களின் (Nail) நிலை, நிறம் மற்றும் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் ஊட்டச்சத்து குறைபாடுகள் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம். நகங்களில் ஏற்படும் இந்த மாற்றங்கள் ஊட்டச்சத்து (Nutrition) குறைபாடுகளைக் குறிக்கும் என மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, நகங்களில் தோன்றும் எந்த மாதிரியான மாற்றங்களில் உடலில் எந்த ஊட்டச்சத்து குறைப்பாட்டை குறிக்கும் என்பது பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.
நகங்களில் ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகள்:
நகங்களில் வெள்ளை புள்ளிகள்:
நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருப்பது துத்தநாகம் மற்றும் கால்சியம் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம் . இந்தப் புள்ளிகள் பெரும்பாலும் நக அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. துத்தநாகக் குறைபாட்டை பூர்த்தி செய்ய பூசணி விதைகள், பருப்பு வகைகள் மற்றும் மட்டனை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ALSO READ: உடலில் இந்த 5 அறிகுறிகள் தோன்றுகிறதா..? பக்கவாதம் வருவதற்கான சமிக்ஞை!




நகங்கள் மஞ்சள் நிறமாகுதல்:
மஞ்சள் நிற நகங்கள் வைட்டமின் மற்றும் தாதுப் பற்றாக்குறையின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக, வைட்டமின் ஈ, பயோட்டின் மற்றும் இரும்புச்சத்து குறைபாடுகள் நகங்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு வழிவகுக்கும். அதன்படி, இது கல்லீரல் அல்லது தைராய்டு பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம் . உங்கள் நகங்கள் மஞ்சள் நிறமாகத் தெரிந்தால், பச்சை இலைக் காய்கறிகள், நட்ஸ் மற்றும் முட்டைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பலவீனமான நகங்கள்:
உடையக்கூடிய அல்லது பலவீனமான நகங்கள் பெரும்பாலும் புரதம், கால்சியம் மற்றும் துத்தநாகக் குறைபாட்டைக் குறிக்கின்றன. நகங்களின் வலிமைக்கு புரதம் அவசியம். இதனால்தான் கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆரோக்கியமான நகங்களைப் பராமரிக்க உதவுகின்றன. உங்கள் நகங்கள் எளிதில் உடைந்தால், பால், தயிர், மீன் மற்றும் பாதாம் போன்ற சத்தான உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மெதுவான நக வளர்ச்சி:
உங்கள் நகம் மெதுவாக வளர்ச்சி அடைந்தால் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். நக வளர்ச்சிக்கு வைட்டமின் பி அவசியம். அதே நேரத்தில் இரும்புச்சத்து உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை பராமரிக்கிறது. உங்கள் நகங்கள் மெதுவாக வளர்கின்றன என்றால், பச்சை காய்கறிகள், முட்டைகள் மற்றும் முழு தானியங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கரண்டி வடிவ நகங்கள்:
“கொய்லோனிச்சியா” என்று அழைக்கப்படும் கரண்டி வடிவ நகங்கள் இரும்புச்சத்து குறைபாட்டின் தீவிர அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலையில், நகங்கள் உள்நோக்கி சுருண்டு கரண்டி போன்ற தோற்றத்தைப் பெறுகின்றன. இந்த நிலை பெரும்பாலும் இரத்த சோகை உள்ளவர்களுக்குக் காணப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட, உங்கள் உணவில் கீரை, பீட்ரூட் மற்றும் மட்டன் போன்றவற்றை சேர்க்கவும்.
ALSO READ: யூரிக் அமிலம் அதிகரித்தால் இந்த அறிகுறிகள் தெரியும்.. இது உடலில் என்ன செய்யும்?
நகங்களில் குழிகள்:
நகங்களில் குழிகள் அல்லது கரடுமுரடான தன்மை காணப்பட்டால் துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இந்தப் பிரச்சனை பெரும்பாலும் தடிப்புத் தோல் அழற்சி அல்லது அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் நிலைகளுடன் தொடர்புடையது. வைட்டமின் சி மற்றும் துத்தநாகக் குறைபாடுகளை சரி செய்ய, உங்கள் உணவில் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் விதைகளைச் சேர்க்கவும்.
நகங்களின் நீல நிறமாற்றம்:
நீல நிற நகங்கள் ஆக்ஸிஜன் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இது பெரும்பாலும் இரும்புச்சத்து குறைபாட்டுடன் தொடர்புடையது. இந்தப் பிரச்சனை இரத்த சோகை அல்லது நுரையீரல் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மருத்துவரை அணுகுவது முக்கியம்.