Health Tips: காரில் ஏறினாலே குமட்டல், தலைச்சுற்றல்.. பயணம் செய்யவே பயமா..? எளிதான தீர்வுகள் இதோ!
Car Sickness Prevention: கார் உள்ளிட்ட பயணத்தின்போது வாந்தி வராமல் தடுக்க பெரும்பாலோனோர் வாந்தி தடுப்பு மருந்துகளை வாங்குகிறார்கள். இவை, ஒரு சிலநேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இதுபோன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய சில எளிய சமையலறை பொருட்கள் உள்ளன.

குடும்பத்துடன் சாலை பயணம் அல்லது சுற்றுலா செல்வது எவ்வளவு உற்சாகமாக இருந்தாலும், பலரும் கார்கள், பேருந்துகள் அல்லது ரயில்களில் (Train) ஏறும்போது பலருக்கு தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஏற்படுகிறது. சில நேரங்களில் இந்த பயணம் மிகவும் சங்கடத்தை கொடுப்பது மட்டுமின்றி, சில நேரங்களில் எரிச்சலையும் தரும். இதனால், முழு பயணமும் சில நேரங்களில் தடைபடலாம். இதுபோன்ற சூழ்நிலையை சமாளிக்க, பெரும்பாலோனோர் வாந்தி (Vomit) தடுப்பு மருந்துகளை வாங்குகிறார்கள். இவை, ஒரு சிலநேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். இதுபோன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய சில எளிய சமையலறை பொருட்கள் உள்ளன. இவை உடலை விடுவிப்பது மட்டுமல்லாமல், பயணத்தை மிகவும் இலகுவாகவும் சுவாரஸ்யமாகவும் ஆக்குகின்றன.
ALSO READ: சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிக்கலாமா? இந்த பிரச்சனையை உண்டாக்கும் அபாயம்!
என்னென்ன பொருட்கள் தீர்வு தரும்..?
இஞ்சியை மெல்லுதல்:
இஞ்சி ஒரு இயற்கையான குமட்டல் எதிர்ப்பு மருந்தாக செயல்படுகிறது. பயணத்திற்கு முன்போ அல்லது பயணத்தின் போதோ ஒரு சிறிய துண்டு இஞ்சியை மெல்லுங்கள். இது பயண நேரத்தில் உங்களுக்கு வாந்தி வராமல் தடுக்கும்.




எலுமிச்சை சாறு மற்றும் உப்பு:
பயண நேரத்தின்போது வாந்தி வந்தால், அது வராமல் தடுக்க சிறிது எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு உப்பை கலக்கவும். இதை அவ்வபோது, குடிக்கும்போது வாந்தி வராமல் தடுக்க உதவி செய்யும். அப்படி இல்லையென்றால், உங்கள் வாயில் ஒரு துண்டு எலுமிச்சையை வைத்து கொள்ளலாம்.
புதினா இலைகள்:
புதினாவின் புதிய வாசனை இதமானது. பயண நேரத்தின்போது ஒரு சில புதினா இலைகளை மெல்லலாம். அப்படி இல்லையென்றால், புதினா டீ குடிக்கலாம். இது வாந்தி வராமல் தடுக்க உதவி செய்யும்.
ஐஸ் வாட்டர் பருகுதல்:
சிறிய அளவில் ஐஸ் வாட்டரை மீண்டும் மீண்டும் குடிப்பது வயிற்றை அமைதிப்படுத்தவும், அசௌகரியத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
லேசான உணவு:
வெறும் வயிற்றில் பயணம் செய்வது உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும். எனவே பயணத்திற்கு முன் லேசான பிஸ்கட் அல்லது ஆயில் இல்லாத உணவை எடுத்து கொள்ளலாம்.
ALSO READ: மார்பில் அடிக்கடி எரியும் உணர்வா..? இந்த பழக்கவழங்களே காரணம்..!
சரியான இருக்கை:
காரின் முன் இருக்கையிலோ அல்லது ஜன்னல் ஓரத்திலோ உட்காருவது அதிர்ச்சிகள் மற்றும் காற்றோட்டத்தால் ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கிறது. எக்காரணத்தை கொண்டும் பின்வரிசையில் உட்கார வேண்டாம். பின்வரிசை இருக்கையில் உட்காரும்போது வாகன இயக்கத்தில் தூக்கிப்போடும். இது குமட்டலை உண்டாக்கும்.
மேலே உள்ள குறிப்புகள் எதுவும் வேலை செய்யவில்லை என்றால், மருத்துவர் பரிந்துரைத்தபடி இயக்க நோய் எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது.