Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Pregnancy Tips: பருவ மாற்றத்தின்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதை எப்படித் தடுப்பது?

Pregnancy Health Tips: கர்ப்பிணிப் பெண்கள் மழை மற்றும் குளிர்காலத்தில் தொடர்ந்து சற்று அடர்த்தியான ஆடைகளை அணிவது தங்கள் உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உதவி செய்யும். அதேபோல், வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.

Pregnancy Tips: பருவ மாற்றத்தின்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதை எப்படித் தடுப்பது?
கர்ப்பிணி ஆரோக்கியம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 25 Nov 2025 18:13 PM IST

மழைக்காலம் (Rainy Season) மற்றும் குளிர்காலம் தொடங்கியவுடன் கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். ஏனெனில், இது தாய் மற்றும் கருவில் உள்ள குழந்தைக்கு அவசியமானது. அதாவது, மழை மற்றும் குளிர்காலம் தொடங்கியதும் கர்ப்பிணி பெண்களின் (Pregnant women) உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி தொற்று அபாயத்தை அதிகரிக்கும். மேலும், வெப்பநிலை குறைவது உயர் அல்லது குறைந்த இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி பிரச்சனையை தரும். இந்த பருவ மாற்றத்தின்போது வெளிப்படும் குளிர்ந்த காற்று நீரிழப்பு, சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் பலவீனத்தை ஏற்படுத்தும். இதனால், கர்ப்பிணி பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு மற்றும் வறண்ட சருமம் ஆகியவையும் ஏற்படலாம். எனவே, இந்த பருவ மாற்றத்தின்போது மேற்கொள்ளப்படும் சில விஷயங்கள் இருவரின் ஆரோக்கியத்திற்கு சிறந்தவையாக மாறும்.

ALSO READ: கர்ப்ப காலத்தில் பெண்கள் என்ன செய்யலாம்..? மருத்துவர் நான்சி அட்வைஸ்..!

என்ன செய்யலாம்..?

மழை மற்றும் குளிர்காலம் கர்ப்பிணிப் பெண்களைப் பல வழிகளில் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் நோயெதிர்ப்பு அமைப்பு ஏற்கனவே பலவீனமாக இருக்கும் என்பதால் காய்ச்சல், சளி மற்றும் நிமோனியா போன்ற வைரஸ் தொற்றுகள் மிகப்பெரிய பாதிப்பை தரும். குளிர்ச்சியான காற்று இரத்த ஓட்ட பாதிப்பு, கைகள் மற்றும் கால்கள் குளிர்ச்சியடைதல், விறைப்பு மற்றும் இரத்த அழுத்த ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தும். சில பெண்கள் மூட்டு வலி, சோர்வு மற்றும் சுவாசப் பிரச்சினைகளையும் சந்திக்கலாம். சூரிய ஒளி இல்லாதது வைட்டமின் டி அளவைக் குறைக்கிறது. இது எலும்புகள் பலவீனமடைவதற்கு வழிவகுக்கிறது. உடல் போதுமான அளவு சூடாக இல்லாவிட்டால், தசை விறைப்பு மற்றும் வலி ஏற்படலாம்.

பருவ மாற்றத்தின்போது கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும்?

கர்ப்பிணிப் பெண்கள் மழை மற்றும் குளிர்காலத்தில் தொடர்ந்து சற்று அடர்த்தியான ஆடைகளை அணிவது தங்கள் உடல் வெப்பநிலையைப் பராமரிக்க உதவி செய்யும். அதேபோல், வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இதை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். 8 மாதத்திற்கு பிறகான கர்ப்பிணி பெண்கள் என்றால் பகலில் லேசான உடற்பயிற்சி அல்லது நடைபயிற்சி மேற்கொள்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். மேலும், நீங்கள் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகப்படுத்துங்கள். ஏனெனில் உடலுக்கு நீரேற்றம் தேவை.

ALSO READ: மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சலா? மருத்துவர் ஹரிணி ஸ்ரீ சொல்லும் அட்வைஸ்!

இதுபோன்ற பருவ மாற்றத்தின்போது வைரஸ் பரவுவதைத் தடுக்க வெளியில் செல்லும்போது மாஸ்க் அணியுங்கள். கர்ப்ப காலத்தில் மன ஆரோக்கியமும் சமமாக முக்கியமானது என்பதால், இரவில் நன்றாகத் தூங்கி மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்.
ஏதேனும் பிரச்சனைகள் தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.