Eye Care: தினமும் இந்த பழங்கள் சாப்பிட்டால் போதும்.. கண்களின் பார்வை திறன் கூடும்!
Fruits and Vegetables: உங்கள் கண்களை ஆரோக்கியமாக (Eyes Care) வைத்திருக்க சில பயனுள்ள விஷயங்கள் உள்ளது. அந்தவகையில், சரியான பழங்கள் (Fruits) மற்றும் காய்கறிகளை தவறாமல் சாப்பிடுவது உங்கள் பார்வையை கூர்மையாக வைத்திருக்கும். மேலும் இது கண் நோய்களைத் தடுக்கும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்
லேப்டாப் மற்றும் மொபைல் போன்களின் திரையை நீண்ட நேரம் பார்ப்பதாலும், மாசுபாடு மற்றும் மன அழுத்தம் காரணமாகவும் கண்களில் ஏற்படும் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதனால், காலைகளில் எழுப்பும்போது கண் எரிச்சல் ஏற்படுகிறது. இதையடுத்து, உங்கள் கண்களை ஆரோக்கியமாக (Eyes Care) வைத்திருக்க சில பயனுள்ள விஷயங்கள் உள்ளது. அந்தவகையில், சரியான பழங்கள் (Fruits) மற்றும் காய்கறிகளை தவறாமல் சாப்பிடுவது உங்கள் பார்வையை கூர்மையாக வைத்திருக்கும். மேலும் இது கண் நோய்களைத் தடுக்கும் மற்றும் வயது தொடர்பான பிரச்சினைகளையும் தடுக்கும். கண்களை பராமரிக்க உதவும் பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: ஆஹா! ஆரஞ்சு தோலில் இவ்வளவு நன்மைகளா? தூக்கி மட்டும் போடாதீங்க!
சிட்ரஸ் பழங்கள்:
ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது கண்களின் இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது கண்புரை அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. அதன்படி, தினமும் ஒரு ஆரஞ்சு அல்லது அரை எலுமிச்சை சாப்பிடுவது உங்கள் கண் ஆரோக்கியத்திற்கு உதவும்.
பெர்ரி வகைகள்:
ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பெர்ரி வைகளில் அந்தோசயனின் எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி உள்ளது. இது குறிப்பாக மாலை கண் நோய் அபாயத்தைக் குறைத்து கண் சோர்வைப் போக்க உதவுகிறது. மேலும், குளிர் காலம் போன்ற பருவகாலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரிசெய்யும்.
மாம்பழம் மற்றும் பப்பாளி:
மாம்பழம் மற்றும் பப்பாளியில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டுள்ளன. வைட்டமின் ஏ என்பது கண்ணின் விழித்திரையின் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். இது ஆரோக்கியமான பார்வைக்கு அவசியமானது.
கீரை, முட்டைக்கோஸ்:
நல்ல பார்வைக்கு திறனுக்கு லுடீன் மற்றும் ஜீயாக்சாந்தின் என்ற இரண்டு கரோட்டினாய்டுகள் ஆகியவை அவசியம். இந்த இரண்டு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவை சூரியனின் ப்ளூ ரேவில் இருந்து கண்களைப் பாதுகாக்கின்றன. மேலும் இது வயது தொடர்பான மாகுலர் சிதைவைத் தடுக்க உதவுகின்றன.
கேரட்:
கேரட் கண் பராமரிப்பில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு பீட்டா கரோட்டின் உள்ளது. இது உடலில் நுழைந்த பிறகு வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது கார்னியாவை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதிலும், வறண்ட கண்களின் பிரச்சனையைக் குறைப்பதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ALSO READ: கேரட் சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்! எவ்வளவு சாப்பிடுவது நல்லது?
மிளகாய்:
மிளகாயில் உள்ள வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கண்களில் உள்ள இரத்த நாளங்களை பலப்படுத்தும்.
இதனுடன், நீங்கள் தொடர்ந்து போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் மீன், வால்நட்ஸ், ஆளி விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.