மீன் சாப்பிட்டால் முடி வளருமா? உண்மை என்ன? விவரம் இதோ

Hair Care Secrets : சமீப காலமாக பலரும் முடி உதிர்தல் பிரச்னையால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் மீன் முடி உதிர்தல் பிரச்னையில் இருந்து முற்றிலும் பாதுகாப்பு அளிக்கிறது. இந்த கட்டுரையில் மீன் சாப்பிடுவதால் முடி சம்மந்தப்பட்ட பிரச்னைகள் எப்படி சரியாகும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மீன் சாப்பிட்டால் முடி வளருமா? உண்மை என்ன? விவரம் இதோ

மாதிரி புகைப்படம்

Published: 

08 Jun 2025 23:33 PM

 IST

முடி நன்றாக வளர, அதை முறையாகப் பராமரிக்க வேண்டும்.  குறிப்பாக ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் மீன் (Fish) சாப்பிடுவது முடி ஆரோக்கியமாக வளர உதவும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.  மீன்களில், குறிப்பாக எண்ணெய் நிறைந்த சால்மன் (Salmon fish), கானாங்கெளுத்தி மற்றும் மத்தி ஆகியவற்றை உணவில் அதிகமாக எடுத்துக்கொண்டால் அவை நமக்கு உடலில் பல நன்மைகளை வழங்கும். குறிப்பாக அவை நமது முடியின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவும். மேலே குறிப்பிட்ட மீன்கள் அனைத்தும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை கொண்டுள்ளன. இவை அனைத்தும் முடி வளர்ச்சிக்கு மிகுந்த  முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக முடி உதிர்தல் பிரச்னை இருப்பவர்கள் மீன்களை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மீன் உணவுகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்

அடர்த்தியான, பளபளப்பான கூந்தலுக்கு மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். முடி கெரட்டின் எனப்படும் புரதத்தால் ஆனது, மேலும் அதை உற்பத்தி செய்ய உடலுக்கு அமினோ அமிலங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் தொடர்ந்து கிடைக்க வேண்டும்.  பெரும்பாலும் அவை புரதம் நிறைந்த உணவுகளில் இருக்கின்றன. குறிப்பாக மீன்கள் இந்த சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. புரதம் முடிகளின் வேர் வரை சென்று செயல்பட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மேலும் மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதோடு வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் முடியின் வேர் வரை சென்று பலனளிக்கிறது. மீனில் உள்ள இரும்பு மற்றும் துத்தநாகம் சத்துகள் முடி உதிர்தல் மற்றும் உடைதலைத் தடுக்க உதவுகிறது. பி வைட்டமின்கள் (குறிப்பாக பி12 மற்றும் பயோட்டின்) செல் சுழற்சி ஏற்படுத்துவதோடு முடிக்கு தேவையான வலிமையையும் அளிக்கின்றன.

இந்த சத்துக்கள் மீனை முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள உணவுகளில் ஒன்றாக மாற்றுகிறது. அதனால்தான் தோல் மருத்துவர்கள் பெரும்பாலும் முடி ஆரோக்கியமாக வளர கொழுப்பு நிறைந்த மீனை பரிந்துரைக்கின்றனர். மீன்களை, குறிப்பாக கொழுப்பு மீன்களை தவறாமல் சாப்பிடுவது, முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும். மரபியல் குறைபாடு, மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகள், ஹார்மோன் சமநிலை மற்றும் ஆகியவற்றை சரி செய்து முடி நன்கு வளர்வதற்கான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

வாரத்திற்கு 2 அல்லது 3 முறை மீன் உங்கள் உணவில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது உங்கள் தலைமுடிக்கு மட்டுமல்ல, உங்கள் இதயம், மூளை மற்றும் சருமத்திற்கும் நல்லது. சைவ உணவு உண்பவர்கள் அல்லது உணவு கட்டுப்பாடுகள் உள்ளவர்கள் ஆளி விதைகள், வால்நட்ஸ் போன்றவற்றையும் சாப்பிடலாம், இது மீனுக்கு சமமான நன்மைகளை வழங்குகிறது.

Follow Us
எங்கள் விமானம் தாக்கப்படும் அபாயம் - பாகிஸ்தான் சென்ற ஈரான் குழுவினர் அச்சம்
போரைப் போல மோதிக்கொள்ளும் சிம்பான்சிகள் - காரணம் என்ன?
UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சீனா தயாரித்த செயற்கைக்கோள் மூலம் கண்காணிப்பு? எழுந்த புதிய பாதுகாப்பு கவலை..