AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இளநீர் Vs கரும்பு ஜூஸ்: கோடை வெயிலில் எது சிறந்தது?

Tender Coconut vs Sugarcane Juice: கோடை வெயிலில் உடலை குளிர்ச்சியாகவும் ஹைட்ரேட்டாகவும் வைத்திருக்க இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் இரண்டும் பயனுள்ளதாகும். உடனடி ஆற்றல் தேவைக்கு கரும்பு ஜூஸ் சிறந்தது, ஆனால் இதில் சர்க்கரை அளவு அதிகம் என்பதால் மிதமாகவே குடிக்க வேண்டும். இளநீர் உடலில் நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தி செரிமானம் மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது.

இளநீர் Vs கரும்பு ஜூஸ்: கோடை வெயிலில் எது சிறந்தது?
இளநீர் Vs கரும்பு ஜூஸ்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 20 Apr 2026 11:40 AM IST

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உடலில் சோர்வு, நீர்ச்சத்து குறைபாடு போன்ற பிரச்சனைகள் அதிகமாகும் அபாயம் உள்ளது. இதனால் வெப்பத்தை தணிக்கவும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் மக்கள் இயற்கை பானங்களை அதிகமாக நாடுகின்றனர். குறிப்பாக இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் ஆகியவை கோடைக்காலத்தில் மிகவும் பிரபலமான தேர்வுகளாக மாறியுள்ளன. இந்த இரு பானங்களும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குவதால், எது சிறந்தது என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுகிறது.

கரும்பு ஜூஸ் – உடனடி ஆற்றல் தரும் பானம்

கரும்பு ஜூஸ் முற்றிலும் இயற்கையான பானமாகும். இதை குடித்தவுடன் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கிறது என்பது அதன் முக்கிய சிறப்பு. அதிக வெப்பத்தில் சோர்வடைந்த உடலுக்கு இது விரைவில் சக்தியை வழங்குகிறது. மேலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு, கல்லீரல் செயல்பாட்டை சீராக வைத்திருக்கவும் கரும்பு ஜூஸ் உதவுகிறது.

கரும்பு ஜூஸின் கூடுதல் நன்மைகள்

கோடை மாதங்களில் கரும்பு ஜூஸ் பருகுவது உடலின் வெப்பத்தை குறைக்க உதவுகிறது. இதனால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயமும் குறைகிறது. இதிலுள்ள இயற்கை சத்துக்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும், உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்கவும் உதவுகின்றன. மேலும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கோடையில் ஏற்படும் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் தன்மையும் இதற்கு உள்ளது.

இளநீர் – இயற்கையான ஹைட்ரேஷன் தீர்வு

இளநீர் கோடைக்காலத்தில் உடலுக்கு மிகச்சிறந்த நீர்ச்சத்து ஆதாரமாக கருதப்படுகிறது. வெயிலில் இழக்கும் நீர்ச்சத்தினை உடனடியாக ஈடு செய்யும் திறன் இதற்கு உள்ளது. செரிமானத்தை மேம்படுத்தவும், அசிடிட்டி பிரச்சனைகளை குறைக்கவும் இது உதவுகிறது. மேலும் குறைந்த கலோரிகள் கொண்டதால், காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தவும் இளநீர் முக்கிய பங்காற்றுகிறது.

எது சிறந்தது? – தேவைக்கு ஏற்ப தேர்வு

இளநீர் மற்றும் கரும்பு ஜூஸ் இரண்டுமே கோடைக்காலத்தில் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. எனவே எது சிறந்தது என்பது ஒருவரின் உடல் தேவையைப் பொறுத்தது. உடனடி ஆற்றல் தேவைப்பட்டால் கரும்பு ஜூஸ் நல்ல தேர்வாக இருக்கும். அதே நேரத்தில் நீர்ச்சத்து குறைபாட்டை சரிசெய்யவும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் இளநீர் சிறந்தது.

நோயாளிகளுக்கான கவனம்

நீரிழிவு நோயாளிகள் கரும்பு ஜூஸை அளவோடு மட்டுமே பருக வேண்டும், ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரை அதிகமாக உள்ளது. அதற்கு பதிலாக இளநீர் அவர்களுக்கு பாதுகாப்பான தேர்வாக இருக்கும். மொத்தத்தில், கோடை வெயிலில் இரு பானங்களையும் மிதமாகவும், தேவைக்கு ஏற்ப மாற்றி மாற்றியும் பருகுவது உடல்நலத்திற்கு சிறந்ததாகும்.

Follow Us