Health Tips: தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதைகள்.. ஆரோக்கிய அட்வைஸ் தரும் மருத்துவர் சிவசுந்தர்!
Pumpkin Seeds Benefits: காலையில் பூசணி விதைகள் உட்கொள்வது நீண்ட கால ஆற்றலை வழங்குகிறது. மேலும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இந்த விதைகளில் வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.

பூசணி விதைகள்
பூசணி விதைகள் (Pumpkin Seeds) ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். ஆரோக்கியத்தில் அக்கறை கொண்ட நபர்கள் சியா விதைகள், ஆளி விதைகள், தர்பூசணி விதைகள், முலாம்பழம் விதைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகள் தங்கள் உணவுகளில் சேர்த்து கொள்கின்றனர். ஊட்டச்சத்து நிறைந்த இந்த விதைகள், சிறந்த ஆற்றலின் (Energy) மூலமாக கருதப்படுகின்றன. பூசணி விதைகள் லேசான இனிப்பு சுவையை கொண்டுள்ளன. அந்தவகையில், பூசணி விதைகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி மருத்துவர் சிவசுந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பூசணி விதைகளின் நன்மைகள்:
காலையில் பூசணி விதைகள் உட்கொள்வது நீண்ட கால ஆற்றலை வழங்குகிறது. மேலும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இந்த விதைகளில் வைட்டமின்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
ALSO READ: தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தை கடிக்கிறதா? தடுக்க Dr. ஹரிணி ஸ்ரீ டிப்ஸ்!
எடையை கட்டுப்படுத்த உதவும்:
பூசணி விதைகளில் கலோரிகள் மிக குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இது எடை குறைப்பை ஊக்குவிக்கிறது. பூசணி விதைகளை சாப்பிடுவது உங்களை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தக்க வைத்து கொள்ளவும், பசியை குறைக்கவும் உதவுகிறது. இதிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்கிறது. இவற்றின் நீர்ச்சத்து உடலை நீரேற்றமாக வைக்கிருக்கிறது.
இரத்த அழுத்தம்:
மெக்னீசியம் நிறைந்த பூசணி விதைகளை உட்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த விதைகள் சாப்பிடுவது இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த இந்த விதைகள் கொழுப்பை கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.
இரத்த சர்க்கரை:
பூசணி விதைகளை உட்கொள்வது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த விதைகளில் உள்ள மெக்னீசியம் இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, சர்க்கரை நோயாளிகளில் சர்க்கரை அளவை இயல்பாக்குகிறது.
ALSO READ: தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை.. இது நிலைமையை சீராக்கும்!
சிறுநீர் தொற்றை தடுக்கும்:
பூசணி விதைகளை தொடர்ந்து உட்கொள்வது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை தடுக்க உதவுகிறது. பூசணி விதைகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் இயற்கை சேர்மங்கள் உள்ளன. இவை சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாக்டீரியா தொற்றுகளை தடுக்க உதவுகின்றன. பூசணி விதைகள் பல சிறுநீர் பிரச்சனைகளை தடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.