Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிங்க் உப்பு vs வெள்ளை உப்பு – எது ஆரோக்கியத்திற்கு நல்லது?

Pink Salt vs White Salt : பிங்க் உப்பு மற்றும் வெள்ளை உப்பு: இரண்டிற்கும் அதன் சொந்த நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. நீங்கள் அயோடின் விரும்பினால், வழக்கமான உப்பு சரியானது. நீங்கள் இயற்கை தாதுக்கள் மற்றும் வேறுபட்ட சுவையை விரும்பினால், நீங்கள் பிங்க் உப்பை எடுத்துக் கொள்ளலாம்.

பிங்க் உப்பு vs வெள்ளை உப்பு – எது ஆரோக்கியத்திற்கு நல்லது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Sep 2025 21:51 PM IST

உப்பு நமது உணவில் ஒரு முக்கிய பகுதியாகும். காய்கறிகளை சமைப்பதாக இருந்தாலும் சரி, சாலட்களில் சேர்ப்பதாக இருந்தாலும் சரி, பிரஞ்சு ஃபிரைஸின் சுவையை அதிகரிப்பதாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலும் உப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதிகப்படியான உப்பு என்பது அதிகப்படியான சோடியம், இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகமாக சோடியம் உட்கொள்வது இரத்த அழுத்தத்தை (Blood Pressure)அதிகரிக்கிறது. இது இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே வழக்கமான உப்பை விட பிங்க் உப்பு சிறந்ததா? என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பிங்க் உப்பு என்பது என்ன?

பிங்க் உப்பு ஹிமாலையன் உப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உப்பு இமயமலைக்கு அருகிலுள்ள சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. அதன் பிங்க் நிறம் அதில் உள்ள இரும்பு ஆக்சைடு போன்ற தாதுக்களால் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர் ஹரிப்ரியாவின் கருத்துப்படி, இந்த உப்பு அதிகம் பதப்படுத்தப்படுவதில்லை. அதனால்தான் இது மிகவும் இயற்கையானதாகக் கருதப்படுகிறது.

இதையும் படிக்க : கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தை வெள்ளையாக பிறக்குமா? பிரபல மருத்துவர் விளக்கம்!

சாதாரண உப்பு என்பது என்ன?

சாதாரண உப்பு என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் உப்பு. இது பதப்படுத்துதல் மூலம் தயாரிக்கப்படுகிறது. அதிலிருந்து பல தாதுக்கள் அகற்றப்படுகின்றன. அதில் கேக்கிங் எதிர்ப்பு பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. ஒரு டீஸ்பூன் சாதாரண உப்பில் சுமார் 2400 மி.கி. சோடியம் உள்ளது. இருப்பினும், அமெரிக்க சுகாதார மையம் ஒரு நாளைக்கு 2300 மி.கி.க்கும் குறைவான சோடியத்தை உட்கொள்ள பரிந்துரைக்கிறது.

பிங்க் உப்புக்கும் வழக்கமான உப்புக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டும் முக்கியமாக சோடியம் குளோரைடைக் கொண்டுள்ளது. பிங்க் உப்பில் 84-98 சதவீதம் உள்ளது, அதே நேரத்தில் வழக்கமான உப்பில் 97-99 சதவீதம் உள்ளது. இரண்டும் உணவின் சுவையை அதிகரிக்கவும் உணவைப் பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.
இரண்டையும் அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இது இதய நோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

வித்தியாசம் என்ன?

  • கடல் நீர்  மூலம் சாதாரண உப்பு தயாரிக்கப்படுகிறது.  அதே போல இமயமலைக்கு அருகிலுள்ள உப்பு சுரங்கங்களில் இருந்து பிங்க் உப்பு தயாரிக்கப்படுகிறது.
  • வழக்கமான உப்பு மேலும் சுத்திகரிக்கப்படுகிறது. அதில் அயோடின் சேர்க்கப்படுகிறது. பிங்க் உப்பு இயற்கையானது. இது சுத்திகரிக்கப்படாதது.
  • பிங்க் உப்பில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற 84 க்கும் மேற்பட்ட தாதுக்கள் உள்ளன
  • வழக்கமான உப்பு வெள்ளை நிறத்தில் மெல்லியதாக இருக்கும்.  அதே போல பிங்க் உப்பு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். மேலும் இது மெல்லியதாக இல்லாமல்,  சற்று கட்டியாக இருக்கும்.
  • வழக்கமான உப்பு அதிக உப்புத்தன்மை கொண்டது. அதேபோல், பிங்க் உப்பு லேசான, தாது சுவை கொண்டது.

வழக்கமான உப்பு உட்கொள்ளல் அயோடின் குறைபாட்டைத் தடுக்கலாம். பிங்க்  உப்பு நீரேற்றம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவுகிறது.

இதையும் படிக்க : தைராய்டு உள்ளவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்.. இதை சாப்பிட்டால் கட்டுப்படுத்துவது கடினம்!

இதில் எந்த உப்பை எடுக்க வேண்டும்?

இரண்டிற்கும் அதன் சொந்த நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன. அயோடின் வேண்டுமென்றால் வழக்கமான உப்பை எடுத்துக்கொள்ளலாம். இயற்கை தாதுக்கள் மற்றும் வேறுபட்ட சுவை வேண்டுமென்றால், நீங்கள் பிங்க் உப்பை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்,  எந்த வகையான உப்பையும் அதிகமாக உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.