Knee Pain: முழங்கால் வலியால் நடக்க முடியவில்லையா? வலியின்றி நடக்க உதவும் குறிப்புகள்!
Tips for Walking with Knee Pain: அதிக உடல் எடையும் மூட்டு வலி பிரச்சனையை உண்டாக்கும். எனவே உங்கள் எடையை முடிந்தவரை கட்டுக்குள் வைத்திருங்கள். வலி கடுமையாக இருந்தால் அல்லது வீக்கம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது நல்லது.

தினமும் சிறிது தூரம் நடப்பது (Walking) ஆரோக்கியத்திற்கு நல்லது. இது தெரிந்த உண்மை என்றாலும், சிலர் முழங்கால் வலி (Knee Pain) காரணமாக நடப்பதை நிறுத்துகிறார்கள். நாளடைவில் அவர்களால் சிறு அடி எடுத்து வைக்கவே பயங்கரமாக கஷ்டப்படுகிறார்கள். இருப்பினும், இந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கூட ஆரோக்கியமாகவும் வலியின்றி நடக்க முடியும். இதற்காக, நீங்கள் சில குறிப்புகளைப் பின்பற்றினால், உங்களுக்கு முழங்கால் வலி பிரச்சனை இருக்காது. முழங்கால் வலி என்பது ஒரு சிலருக்கு மட்டுமல்ல, பலரும் இந்தப் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். நீங்கள் 5 குறிப்புகளை சரியாகப் பின்பற்றினால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல், கால் வலியும் இல்லாமல் நடக்க முடியும். அந்த குறிப்புகள் என்ன, அவை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
சரியான காலணிகள்:
நீங்கள் சாதாரண காலணிகளை அணிந்து நடப்பதில் சிரமத்தை எதிர்கொண்டால், நீங்கள் நிச்சயமாக நல்ல காலணிகளை தேர்வு செய்வது முக்கியம். அதன்படி, அதிக மெத்தை கொண்ட மற்றும் உங்கள் கால்களுக்கு வளைவு ஆதரவை வழங்கும் ஷூஅல்லது செருப்புகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவை கால்களில் அழுத்தத்தைக் குறைத்து, பாதங்களுக்கு நல்ல ஆதரவை வழங்கும். உங்களுக்கு தட்டையான பாதங்கள் இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, எந்த வகையான செருப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
ALSO READ: உங்கள் கால்களில் இந்த பிரச்னை இருக்கா? இதய நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்




நடந்து செல்லும் இடம்:
உங்கள் நடைப்பயணத்திற்கு ஒரு தட்டையான, இணையான மேற்பரப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கான்கிரீட் அல்லது கடினமான பரப்புகளில் நடப்பது உங்கள் முழங்கால்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். மேலும், நீங்கள் வெறுங்காலுடன் நடக்க விரும்பினால், நீங்கள் புல்லில் நடக்கலாம். இதற்காக நீங்கள் ஒரு பூங்காவிற்குச் செல்லலாம். காலணிகள் அல்லது செருப்புகள் இல்லாமல் மென்மையான புல்லில் நடப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
சிறிதளவு பயிற்சி:
காலையில் நடக்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக வார்ம் அப் செய்ய வேண்டும். உங்கள் கால்களை மெதுவாக நீட்டி மடக்கி பயிற்சி கொடுக்கலாம். மேலும், உங்கள் முழு உடலையும் நீட்டி மடக்கி பயிற்சி செய்வது உங்கள் உடலை எந்த சிரமமும் இல்லாமல் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். இதன் காரணமாக, நடைபயிற்சியை எளிதாக்கும். நீங்கள் 5 நிமிடங்கள் வார்ம் அப் செய்யலாம், பின்னர் மெதுவாக நடந்து கொடுக்கலாம்.
பாதுகாப்பு:
உங்களுக்கு முழங்கால் வலி இருந்தால், நடக்கும்போது கண்டிப்பாக பாதுகாப்பு அணிய வேண்டும். பிரேஸ்கள், நீல் பேண்ட் போன்ற ஆதரவுகளை அணிவது நீங்கள் நடக்கும்போது வலியை குறைக்கு. அதாவது, இவையான பாதுகாப்பு உபகரணங்கள் மூட்டு போன்ற பகுதியில் உள்ள அழுத்தத்தையும் குறைக்கும். பிசியோதெரபிஸ்ட்டின் ஆலோசனையுடன் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ALSO READ: சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த 3 பழக்கங்கள் உள்ளதா? இரத்த சர்க்கரை அதிகரிக்கலாம்!
இது தவிர, நடந்த பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் முழங்கால்களில் ஐஸ் கட்டியைப் பயன்படுத்துவது நிவாரணம் அளிக்கும். முழங்கால்களை வலுப்படுத்தும் சிறிய பயிற்சிகளைச் செய்வது நல்லது. நீங்கள் காலை தூக்குதல், சுவர் இருக்கைகள் போன்ற பயிற்சியை மேற்கொள்வது வலியைக் குறைத்து முழங்கால் தசைகளை வலுப்படுத்துகின்றன.
அதிக உடல் எடையும் மூட்டு வலி பிரச்சனையை உண்டாக்கும். எனவே உங்கள் எடையை முடிந்தவரை கட்டுக்குள் வைத்திருங்கள். வலி கடுமையாக இருந்தால் அல்லது வீக்கம் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். மேலும், வலி கடுமையாக இருந்தால், மருத்துவ உதவியை நாடுவது நல்லது.