நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு: ஒரே நாளில் 564 பேருக்கு பாதிப்பு

Covid Spike in India : இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஜூன் 5, 2025 அன்று ஒரே நாளில் 564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை யாருக்கும் ஏற்படவில்லை. ஆனால் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு: ஒரே நாளில் 564 பேருக்கு பாதிப்பு

மாதிரி புகைப்படம்

Published: 

05 Jun 2025 20:02 PM

நாடு முழுவதும் கொரோனா (Corona) தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் உயர்ந்து வருகின்றது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்படி, ஜூன் 5, 2025 அன்று ஒரே நாளில் 4,866 பேர்  சிகிச்சையில் பெற்று வருகின்றனர். இது முந்தைய நாளைவிட சுமார் 564 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகபட்சமாக கேரளாவில் (Kerala) 114 பேரும், கர்நாடகாவில் (Karnataka) 112 பேரும் மேற்கு வங்கத்தில் (West Bengal) 106 பேரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை புதிதாக யாருக்கும் கொரோனா பாதிக்கவில்லை. கேரளாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளதாகவும், அங்கு மருத்துவ பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்குப் பின் கர்நாடகா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான அளவில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

ஒரே நாளில் 7 பேர் மரணம்

கொரோனாவால் ஜூன் 4, 2025 அன்று  ஒரே நாளில் 7 பேர் மரணமடைந்திருக்கின்றனர்.  அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கர்நாடகாவில் 2 பேரும் டெல்லியில் 2 பேரும் உயரிழந்திருக்கின்றனர். மேலும் கொரோனா தொற்றால் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் கொரோனாவுக்கு பின் ஒரே நாளில் 674 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது ஆறுதலாக அமைந்திருக்கிறது.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

 

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் மக்கள் எச்சரிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும்போது மகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டமான இடங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பாதிப்பு குறைவாக இருந்தாலும் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால் வரும் நாட்களில் தமிழகத்திலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் ஆங்காங்கே உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இதுவரை இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள், வயதானவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவித்தி வருகிறது. குறிப்பாக கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.