Ajith Kumar: அஜித்துடன் சந்திப்பு.. நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா!

Ajith Kumar And Yuvan Shankar Raja : கோலிவுட் சினிமாவில் தனது தந்தை இளையராஜாவைப் போலச் சிறப்பான இசையமைப்பாளர் மற்றும் பாடகராக இருந்து வருபவர் யுவன்ஷங்கர் ராஜா. இவர் சமீபத்தில் நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார். இதைக் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சிறப்பான பதிவை வெளியிட்டுள்ளார்.

Ajith Kumar: அஜித்துடன் சந்திப்பு.. நெகிழ்ச்சி பதிவை வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா!

யுவன் ஷங்கர் ராஜ் மற்றும் அஜித் குமார்

Published: 

19 Jun 2025 18:36 PM

 IST

பான் இந்தியா அளவிற்கு பிரபலமிக்க இசையமைப்பாளராக இருந்து வருபவர் இசைஞானி இளையராஜா (Ilayaraja). அவரின் மகன்தான் யுவன்ஷங்கர் ராஜா (Yuvan shankar Raja). இவரும் தனது தந்தை இளையராஜாவைப் போலத் தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராகவும், பாடகராகவும் இருந்து வருகிறார். இவரின் இசையமைப்பில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar )வரை பல பிரபலங்களின் படங்கள் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. மேலும் இவர் கடந்த 2024ம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபுவின் (Venkat Prabhu) இயக்கத்தில் வெளியான கோட் (GOAT) படத்தில் கூட இசையமைப்பாளராக பணியாற்றியிருந்தார். அந்த அளவிற்குப் பிரமாண்ட பட்ஜெட் படங்களுக்கும் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார் யுவன்ஷங்கர் ராஜா. மேலும் இவர் சமீபத்தில் நடிகரும், கார் ரேஸர் வீரருமான அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார்.

இது தொடர்பாக யுவன்ஷங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அஜித்துடன் இணைந்து இருக்கும் புகைப்படமும் உள்ளது. தற்போது இந்த -பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த பதிவில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா எழுதிய விஷயமும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அஜித்துடன் யுவன்ஷங்கர் ராஜா இருக்கும் எக்ஸ் பதிவு :

அஜித் – யுவன்ஷங்கர் ராஜா :

இந்த பதிவில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா அஜித்தை நேரில் சந்தித்தது குறித்து எழுதியுள்ளார். அதில் அவர் “அஜித் குமாருடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது, மேலும் அவருடன் பேச கார்களை விட வேறு என்ன சிறந்த தலைப்பு இருக்கிறது” என்று எழுதியுள்ளார். தற்போது இந்த பதிவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

யுவன் ஷங்கர் ராஜ் மற்றும் அஜித் குமார் கூட்டணி படங்கள் :

அஜித் குமார் மற்றும் யுவன்ஷங்கர் ராஜாவின் கூட்டணியில் வெளியாகிப் பல வருடங்களைக் கடந்தாலும் இன்று வரையிலும் பேசப்படும் படமாக இருப்பது பில்லா. கடந்த 2007ம் ஆண்டு அஜித்தின் நடிப்பில் வெளியான இப்படத்தை இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் படமாக இப்படம் அமைந்திருந்தது.

இதைத் தொடர்ந்து மங்கத்தா, ஆரம்பம், நேர்கொண்ட பார்வை, தீனா, வலிமை என அஜித் குமாரின் பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜ் இசையமைத்துள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து,  அடுத்ததாகவும் அஜித்துடன் படங்களில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் புதிய படம் :

குட் பேட் அக்லி திரைப்படத்தில் தொடர்ந்து அஜித்தின் 64வது திரைப்படத்தின் ஷூட்டிங் வரும் 2025, நவம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே கணேஷ் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை இப்படத்தில் இசையமைப்பாளராக யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories
Suriya47: ஷூட்டிங்கிற்கு முன்னே சூர்யா47 படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்?
அதிக எதிர்பார்ப்பு.. ஆனால் தியேட்டரில் ஓடல.. 2025ல் எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியுற்ற படங்கள் இதுதான்!
karthi: வா வாத்தியார் பட கதை என்னை ரொம்பவே பயமுறுத்திடுச்சு.. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை- கார்த்தி ஓபன் டாக்!
Rathna Kumar: 29 படத்தின் கதை கூட லோகேஷ் கனகராஜிற்கு தெரியுமான்னு தெரியல.. கலகலப்பாக பேசிய இயக்குநர் ரத்ன குமார்!
Padayappa: போட அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்.. வெளியானது ‘படையப்பா’ பட ரீ-ரிலீஸ் ட்ரெய்லர்!
தென்னிந்திய சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிய டாப் 5 படங்கள் – லிஸ்ட் இதோ
குளிர்கால ஆடைகளை எப்படி ஃபேஷன் ஸ்டேட்மெண்டாக மாற்றுவது.. நடிகர்களின் தேர்வு என்ன?
சீனப் பெண்ணுக்கும் இந்திய இளைஞனுக்கும் நடந்த திருமணம்.. இணையத்தில் வைரலாகும் காதல் கதை..
25கிலோ மீட்டர் தான் தூரம்.. சகோதரனை ஹெலிகாப்டரில் வந்து அழைத்துச் செல்லும் சகோதரி!!
கோஹலி மற்றும் ரோகித் இல்லாமல், 2027 உலகக் கோப்பையை வெல்ல முடியாது - முகமது கைஃப்..