Toxic Movie: யாஷின் டாக்சிக் பட டீசர் ரிலீஸ் எப்போது?- படக்குழு வெளியிட்ட அப்டேட் இதோ!
Toxic Movie Update: கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்துவருபவர் யாஷ். இவரின் நடிப்பில் பான் இந்திய படமாக டாக்சிக் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், படக்குழு சூப்பர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

யாஷின் டாக்சிக்
தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகனாக இருந்துவருபவர் யாஷ் (Yash). இவர் கன்னட சினிமாவில் கதாநாயகனாக கலக்கிவந்த நிலையில், தற்போது ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் பிரபலமான ஒருவராக இருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக கே.ஜி.எஃப் பார்ட் 2 (KGF Part 2) படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவரின் நடிப்பில் சுமார் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம்தான் டாக்சிக் : ஏ ஃபரி டேல் ஃபார் கிரௌன் அப்ஸ் (Toxic: A Fairy Tale for Grown Ups). இந்த திரைப்படத்தில் நடிகர் யாஷ் முற்றிலும் வித்தியாசமான கேங்ஸ்டர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பெண் இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்க, நடிகர் யாஷும் இணைந்து கதையை எழுதியுள்ளார். இந்த படமானது கிட்டத்தட்ட 6 மொழிகளுக்கும் மேல் தயாராகிவரும் நிலையில், வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படத்திலிருந்து ஸ்பெஷல் அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் டாக்சிக் படத்தின் டீசர், நாளை 2026 பிப்ரவரி 20ம் தேதியில் காலை 09:35 மணியளவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: வேள்பாரி படத்தில் நடிக்கும் நடிகர் தனுஷ்? சங்கரின் ப்ளான் என்ன?
டாக்சிக் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து படக்குழு வெளியிட்ட அறிவிப்பு பதிவு:
9:35 AM | 20.02.2026#ToxicTeaser#Toxic In Cinemas Worldwide from 19-03-2026@TheNameIsYash#Nayanthara@humasqureshi @advani_kiara @rukminitweets #TaraSutaria #GeetuMohandas @RaviBasrur #RajeevRavi #UjwalKulkarni #TPAbid #MohanBKere #SandeepSadashiva #PrashantDileepHardikar… pic.twitter.com/HxWOLm08u1
— KVN Productions (@KvnProductions) February 19, 2026
இந்த டாக்சிக் படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, கே.வி.என் ப்ரொடக்ஷன் மற்றும் நடிகர் யாஷும் இணைந்து தயாரித்துள்ளார். மேலும் இந்த படமானது பான் இந்திய மொழிகளில் வெளியாக காத்திருக்கும் நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துவருகிறது. இந்த படத்தில் நடிகர் யாஷுடன் கிட்டத்தட்ட 5 பிரபல நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா போன்ற நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் டோவினோ தாமஸ் நடித்துள்ளர். இப்படத்தின் மூலமாக கன்னட சினிமாவில் இவர் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோலிவுட் சினிமா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்… இன்று மாலை வெளியாகிறது ரஜினி – கமல் படத்தின் அறிவிப்பு
இந்த திரைப்படத்திற்கு கே.ஜி.எஃப் 1 மற்றும் கே.ஜி.எஃப் 2 படத்திற்கு இதையமைத்திருந்த இசையமைப்பாளர் ரவி பஸ்ரூ இசையமைத்துள்ளார். அந்த விதத்தில் இன்னும் இப்படத்திலிருந்து எந்த பாடலையும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது சுமார் ரூ 600 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள நிலையில், நிச்சயமாக ரூ 1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.