பார்வையாளர்களுக்கு எப்போதும் ட்ரெய்லரில் ஒரு சர்ப்ரைஸ் வைப்பேன் – விஷ்ணு விஷால்
Vishnu Vishal: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஆர்யன். இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் விஷ்ணு விஷால் தனது படங்களின் ட்ரெய்லரில் வைக்கப்படும் ட்விஸ்ட்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.

விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால் (Actor Vishnu Vishal) நடிப்பில் தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஆர்யன். க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தொடர்ந்து நடைபெறும் கொலைகளை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான இவர் அந்த சைக்கோ கொலைகாரனை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படத்தின் ட்ரெல்யர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் படம் வருகின்ற 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை இயக்குநர் பிரவின் இயக்கி உள்ள நிலையில் படத்தின் திரைக்கதையை மனு ஆனந்த் உடன் இணைந்து பிரவின் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடிகரும் இயக்குநருமான செல்வராகவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை விஷ்ணு விஷாலில் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள நிலையில் படத்திற்கு விஷ்ணு விஷால் அவரது மகனின் பெயரைதான் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரெய்லரில் பார்வையாளர்களுக்கு வைக்கப்படும் ட்விஸ்ட்:
இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் விஷ்ணு விஷால் அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியதாவது, கட்ட குஷ்தி படத்தின் டிரெய்லரில் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஒரு மல்யுத்த வீரர் என்பதை மறைத்தோம். நான் எப்போதும் பார்வையாளர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க முயற்சிக்கிறேன். அதே போல ஆர்யன் படத்தின் டிரெய்லரில் ரசிகர்கள் கண்டுபிடிக்க முடியாத ஒரு சர்ப்ரைஸை வைத்துள்ளோம். அந்த சர்ப்ரைஸ் ஆர்யன் படம் வேறு ராட்சசன் படம் வேறு என்பதை உணர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read… கப்பு முக்கியம் பிகிலு… 6 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் விஜயின் பிகில் படம்!
இணையத்தில் கவனம்பெறும் நடிகர் விஷ்ணு விஷால் பேச்சு:
“In #GattaKusthi Trailer we hided that Aiswarya is a wrestler🤼♂️. I always try to cheat the audience. In #Aaryan also we have hidden an element which cannot be guessed from Trailer🔥. That element will differentiate Aaryan from #Ratchasan🫰”
– #VishnuVishalpic.twitter.com/8XfIbBZeXf— AmuthaBharathi (@CinemaWithAB) October 25, 2025
Also Read… 25 மில்லியன் பார்வைகளைக் கடந்தது அரசன் படத்தின் ப்ரோமோ வீடியோ – நெகிழ்ந்த சிலமபரசன்