Vikram Prabhu: சிறை படம் அன்பினால் நிரம்பி வழிகிறது – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விக்ரம் பிரபு!
Vikram Prabhu Thanks To Fans: விக்ரம் பிரபுவின் நடிப்பில் 25வது படமாக, கடந்த 2025 டிசம்பர் 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியான படம் சிறை. இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு மற்றும் விமர்சனங்களுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் பதிவை விக்ரம் பிரபு வெளியிட்டுள்ளார்.

விக்ரம் பிரபு
தமிழில் பிரபல நாயகனாக நடித்து அசத்தி வருபவர் விக்ரம் பிரபு (Vikram Prabhu). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் திரைப்படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் 25வது திரைப்படமாக வெளியாகியுள்ள படம் சிறை (Sirai). இந்த படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜேஸ்வரி (Suresh Rajakumari) இயக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பாளர் லலித் (Lalith)தயாரித்திருந்தார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இதில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, அவருடன் அறிமுக நடிகர்கள் எல்.கே.அக்ஷய் குமார் (L.K. Akshay Kumar) மற்றும் அனிஷிமா அனில்குமார் (Anishima Anilkumar) என இருவரும் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படமானது எமோஷனல், காதல் மற்றும் அதிரடி காட்சிகளுடன் கடந்த 2025 டிசம்பர் 25ம் தேதியில் கிறிஸ்துமஸை முன்னிட்டு வெளியாகியிருந்தது.
இந்த படமானது வெளியாகி கிட்டத்தட்ட 15 நாட்களை கடந்த நிலையில், திரையரங்குகளில் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு ஆதரவு மற்றும் நல்ல விமர்சனங்களை பகிர்ந்துவரும் ரசிகர்களுக்கு நடிகர் விக்ரம் பிரபு நன்றி தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பராசக்தியில் அண்ணாவின் வசனம் நீக்கம்… சென்சாரில் 25 கட் – என்னென்ன காட்சிகள் நீக்கம்?
சிறை படத்தின் வரவேற்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த விக்ரம் பிரபு :
Overwhelmed with all the love #Sirai has received and still receiving! Thank You for watching the movie at the theatres and spreading the good word about it ❤️🙏😊#Sirai in theatres close to you 🤘😎 pic.twitter.com/eIyHHLeMbn
— Vikram Prabhu (@iamVikramPrabhu) January 10, 2026
இந்த பதிவில் நடிகர் விக்ரம் பிரபு , “இந்த சிறை படம் பெற்ற, இன்னும் பெரும் அன்பினால் நிரம்பி வழிகிறது. மேலும் இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த மற்றும் அதை பற்றிய நல்ல செய்திகளை பரப்பியதற்கு நன்றி என்றும் சிறை படத்தை பார்க்காதவர்கள் உங்களுக்கு அருகில் உள்ள திரையரங்குகளில் சென்று பாருங்கள்” என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
சிறை படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு :
இந்த படத்தை அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருந்தாலும், இந்த படத்தின் கதையை எழுதியவர் இயக்குநர் தமிழ். இவர் விக்ரம் பிரபுவின் டாணாக்காரன் படத்தை இயக்கியிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது கார்த்தியின் மார்ஷல் என்ற படத்தையும் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக இருந்தாலும் , இந்த படத்தின் கதை அப்துல் மற்றும் கலையரசி என்ற இரு கதாபாத்திரத்தின் காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீ பரவியதா? சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் எப்படி இருக்கு? விமர்சனங்கள் இதோ!
அதைப்போல இப்படத்திற்கு உயிர்நாடியாக இருப்பது இப்படத்தில் இசை மற்றும் பாடல்கள்தான். அதை இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் சிறப்பாகவே செய்துள்ளார். புது படங்கள் வெளியானாலும், தற்போதுவரை திரையரங்குகளில் இப்படம் நல்ல வரவேற்பையே பெற்றுவருகிறது.