விமர்சனங்கள் வந்தாலும் அவர் அதையே தேர்வுசெய்கிறார்… நானாக இருந்தால்- ராஷ்மிகாவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா!

Vijay Deverakonda Emotional Speech: தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் ரீல் ஜோடியாக இருந்துவருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா. இவர்கள் இருவரும் 2 படங்களில் மட்டும் இணைந்து நடித்திருந்தாலும், சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றுள்ளனர். அந்த வகையில், தி கேர்ள்ஃபிரண்ட் பட நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா ராஷ்மிகாவை கண்ணீர்மல்க பாராட்டியுள்ளார்.

விமர்சனங்கள் வந்தாலும் அவர் அதையே தேர்வுசெய்கிறார்... நானாக இருந்தால்- ராஷ்மிகாவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா!

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா

Published: 

15 Nov 2025 11:15 AM

 IST

கன்னட சினிமாவின் மூலம் , தற்போது பான் இந்திய நாயகியாக இருந்துவருபவர் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் கடந்த சில படங்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் நடிப்பதில் மட்டும் இவர் தீவிரமாக ஆர்வம் காட்டிவருகிறார். அந்த வகையில் இவரின் பிரம்மதமான நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்தான் தி கேர்ள்ஃபிரண்ட் (The Girlfriend). இந்த படத்தை இயக்குநர் ராகுல் ரவீந்திரன் (Rahul Ravindran) இயக்க, ராஷ்மிகா மந்தனா மற்றும் தீக்ஷித் ஷெட்டி இணையானது நடித்திருந்தனர். மாறுபட்ட பெண்ணியம் சார்த்த காதல் கதைக்களத்தில் இப்படமானது வெளியாகியிருந்தது. இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்த சமீபத்தில் வெற்றிவிழா நடைபெற்றிருந்த நிலையில், அதில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) கலந்துகொண்டார்.

ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் திருமணம் செய்யவுள்ளார் என கூறிய நிலையில், அதைத் தொடர்ந்த இந்த நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில் அந்த நிகழ்ச்சில் பேசிய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா குறித்து கண்ணீருடன் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் சேதுபதியின் அந்த படத்தை 100 தடவை பார்த்திருக்கிறேன்… அவருக்கு கால் பண்ணி பேசினேன்- ஜான்வி கபூர்!

ராஷ்மிகா மந்தனாவை விஜய் தேவரகொண்டா முத்தமிட்டது தொடர்பான வீடியோ பதிவு :

ராஷ்மிகா மந்தனாவை கண்ணீர்மல்க பாராட்டிய விஜய் தேவரகொண்டா :

அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். மேலும் ராஷ்மிகா மந்தாவை குறித்து பேசிய அவர், “நான் கீதா கோவிந்தம் திரைப்படத்திலிருந்து ராஷ்மிகாவை பார்த்துவருகிறேன். அவரும் உண்மையிலே ஒரு பூமா தேவிதான். அவர் அன்றிலிருந்த்து, இன்று இவ்வளவு பொறுமையாக இருக்கும் பெண்ணாகவே இருந்துவிட்டார். மேலும் அவர் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது, தி கேர்ள்ஃபிரண்ட் போன்ற கதையை தேர்ந்தெடுத்து நடிதித்துள்ளார், இதை நினைத்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.

இதையும் படிங்க: இயக்குநர் ஆனந்த் எல்.ராய் எனக்கு அப்பா மாதிரி.. எமோஷனலாக பேசிய தனுஷ்!

மேலும் அவர், தன்னை பற்றிய பல்வேறு விமர்சனங்களை, கொடுமைகளையும் எதிர்கொண்டுவருகிறார். அவரின் இடத்தில நானா இருந்திருந்தால் உடனே எனது கோபத்தை வெளிப்படுத்தியிருப்பேன். ஆனால் மக்கள் எவ்வாறு தன்னை இகழ்ந்தாலும், ராஷ்மிகா ஒவ்வொரு நலம், அவர் கருணையையே தேர்வு செய்கிறார். ஒருநாள் இந்த உலகம் உண்மையிலே யார் என்று அவரை பார்க்கும். அவர் மிகவும் அற்புதமான பெண் “என அந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பேசியிருந்தார். இதற்கு ராஷ்மிகா மந்தனா கண்ணீர் மல்க மேடையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.