சூர்யா 46 படம் இப்படிதான் இருக்கும்… இயக்குநர் வெங்கி அட்லூரி கொடுத்த அப்டேட்

Suriya 46 Movie: நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக ரெட்ரோ படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது சூர்யாவின் 45-வது படமான கருப்பு மற்றும் சூர்யா 46 ஆகிய படங்களின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் சூர்யா 46 படம் குறித்து இயக்குநர் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

சூர்யா 46 படம் இப்படிதான் இருக்கும்... இயக்குநர் வெங்கி அட்லூரி கொடுத்த அப்டேட்

மமிதா பைஜூ, வெங்கி அட்லூரி, சூர்யா

Published: 

28 Jun 2025 19:36 PM

 IST

நடிகர் சூர்யா (Actor Suriya) மற்றும் வெங்கி அட்லூரி (Director Venky Arluri) கூட்டணியில் உருவாகி வரும் படம் சூர்யா 46. இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைப்பெற்றது. அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜு நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.பி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். படம் குறித்த அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் இயக்குநர் வெங்கி அட்லூரி அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. அதில் இந்தப் படத்தின் கதை மற்றும் நடிகர் சூர்யாவின் கதாப்பாத்திரம் குறித்தும் இயக்குநர் வெங்கி அட்லூரி வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

இந்த நிலையில் இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியதாவது, நீண்ட நாட்களுக்குப் பிறகு, சூர்யா 46 படம் நடிகர் சூர்யா சாருக்கு ஒரு சிறப்பான மகிழ்ச்சியான ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இந்தப் படம் மிகச் சிறந்த மனித உணர்வுகளுடன் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சூர்யாவின் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தைப் போலவே இருக்கும் என்றும் தெரிவிது இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் வெங்கி அட்லூரியின் வைரல் பேச்சு:

அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் சூர்யாவின் கருப்பு படம்:

நடிகர் சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ரெட்ரோ. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூர்யா 45. இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாகி இயக்கி வரும் நிலையில் படத்தில் நடிகை த்ரிஷா க்ருஷ்ணன் நாயகியாக நடித்து உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா மற்றும் த்ரிஷா இருவரும் தங்களது பகுதிகளை நடித்து முடித்துவிட்ட நிலையில் படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்திற்கு கருப்பு என்று பெயர் வைக்கப்பட்டதாக படக்குழு சமீபத்தில் இயக்குநரின் பிறந்த நாளை முன்னிட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?