Venkat Prabhu: சிவகார்த்திகேயனுடன் அடுத்த படம்…. ஷூட்டிங் குறித்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

Sivakarthikeyan New Movie Shooting Update: இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் தி கோட். இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகள் ஆரம்பமான நிலையில், ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த அப்டேட்டை வெங்கட் பிரபு கொடுத்துள்ளார்.

Venkat Prabhu: சிவகார்த்திகேயனுடன் அடுத்த படம்.... ஷூட்டிங் குறித்த அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன்

Published: 

10 Oct 2025 11:45 AM

 IST

கோலிவுட் சினிமாவில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) வரை பல்வேறு உச்ச நட்சத்திரங்களை வைத்து திரைப்படத்தை இயக்கிவந்தவர் வெங்கட் பிரபு (Venkat Prabhu). இவரின் இயக்கத்தில் கடந்த 2024ம் ஆண்டு தளபதி விஜயின் நடிப்பில் தி கோட் (The GOAT) என்ற படமானது வெளியானது. இந்த படமானது சுமார் ரூ 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இந்த படத்தை அடுத்தாக வெங்கட் பிரபு எந்த நடிகருடன் இணையவுள்ளார் என் ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில், அவரே அந்த புதிய படம் மற்றும் நடிகர்கள் குறித்து அறிவித்திருந்தார். தி கோட் திரைப்படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கேமியோ வேடத்தில் நடித்திருந்த நிலையில், தனது புதிய படத்திலும் சிவகார்திகேயனுடன்தான் இணைந்துள்ளார்.

இது குறித்து இவர் தலைவன் தலைவி திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்த கூட்டணி படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகும் மற்றும் இப்படத்தைப் பற்றி சிறப்பு அப்டேட்டையும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ‘கருப்பு’ படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜியுடன் இணையும் நடிகர் இவரா? வைரலாகும் தகவல் இதோ!

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபுவின் படத்தின் அப்டேட் :

சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு அதில், “என்னுடைய புதிய படத்தின் ஷூட்டிங் கூடிய சீக்கிரம் ஆரம்பிக்கப்போறேன். எனது புதிய படம் வேறு யாருமல்ல சிவகார்திகேயனுடன்தான் என அனைவருக்கும் தெரியும். இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலிகள் எல்லாம் பயங்கரமாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கண்டிப்பாக இந்த 2025 டிசம்பர் அல்லது 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கும்.

இதையும் படிங்க: கீர்த்தி ஷெட்டியின் தமிழ் அறிமுகம்.. ஒரே மாதத்தில் வெளியாகும் 3 படங்கள்.. என்னென்ன தெரியுமா?

ஆனால் எனக்கு தெரிந்து நிச்சயமாக 2026ம் ஆண்டு ஜனவரியில் தான் தொடங்கும். நிச்சயமாக இந்த படத்தின் அப்டேட்டை விரைவில் கூறுகிறேன். இந்த படமானது மிகவும் யுனிக்கான கதையாக இருக்கும்” என இயக்குநர் வெங்கட் பிரபு அப்டேட் கொடுத்திருக்கிறார். இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

சிவகார்த்திகேயன் படம் ஷூட்டிங் தொடக்கம் குறித்து வெங்கட் பிரபு பேசிய வீடியோ :

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கப்ட் பிரபு கூட்டணி படத்தின் தயாரிப்பு நிறுவனம் எது :

கோட் படத்தில் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சிறிய வேடத்தில் நடித்திருந்த நிலையில், அதை தொடர்ந்து அவரைவைத்தே ஒரு படத்தையும் எடுக்கவுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ்நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பாலான வெங்கட் பிரபு படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்பது குறிப்பிடத்தக்கது.