Vadam : விமல் நடிக்கும் ‘வடம்’.. டைட்டில் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரல்!
Vadam Movie Title Look : தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் விமல். இவரின் நடிப்பில் இறுதியாக தேசிங்கு ராஜா 2 படமானது வெளியானது. இந்த படத்தை அடுத்ததாக, தற்போது வடம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் விமலின் வடம் திரைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் விமல் (Vemal). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் துணை வேடங்கள் மற்றும் அங்கீகரிக்காத கதாபாத்திரங்கள் எனப் போன்றவற்றில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். விஜய்யின் (Vijay) கில்லி படத்தில் சிறு வேடத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். மேலும் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் தேசிங்கு ராஜா 2 (Desingu Raja2). இயக்குநர் எழில் (Ezhil) இயக்கத்தில் வெளியான இப்படமானது மக்களிடையே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்புகளைப் பெறவில்லை.
இந்த படத்தை அடுத்ததாக தற்போது வடம் (Vadam) என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டரானது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் டைட்டில் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) , தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்ற தேசிய விருதை வென்ற பார்க்கிங் படக்குழு!
நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் புதிய பட டைட்டில் போஸ்டர் :
Launching the title look of @ActorVemal ‘s next – #Vadam.
Wishing the entire cast and crew a successful and fulfilling journey ahead 👍@its_sangeetha_ @bala_actor @masanipict81604 @Prasannadop @EditorSabu @prosathish @S2MediaOffl @decoffl#VadaManjuvirattu pic.twitter.com/aMeDnrLbT2
— VijaySethupathi (@VijaySethuOffl) August 3, 2025
நடிகர் விமல் வடம் என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படமானது ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தை இயக்குநர் கேந்திரன் இயக்கவுள்ளார். இந்த புதிய படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக, பராரி படத்தில் நடித்த நடிகை சங்கீதா நடிக்கவுள்ளாராம். இந்தப் படத்தை மாசாணி பிக்ச்சர்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : அஜித் குமாரின் ‘AK64’ படத்தின் நியூ அப்டேட்.. ரசிகர்களுக்குக் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!
மாசாணி அம்மன் கோவிலில் விமல் தரிசனம் :
விமலின் புதிய படமான வடம் படத்தின் டைட்டில் லுக் 2025, ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டில் லுக் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், நடிகர் விமல், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ததோடு, அங்குச் சிறப்பு அன்னதானமும் வழங்கியுள்ளார். இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.