வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல்… இதயம் முரளி படத்திலிருந்து வெளியானது வான் வான் பாடல்
Vaan Vaan Song Lyric Video | நடிகர் அதர்வா முரளி தற்போது நாயகனாக நடித்து வரும் படம் இதயம் முரளி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்திலிருந்து வான் வான் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

வான் வான் பாடல்
தமிழ் சினிமாவில் மக்களிடையே பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் முரளி. 80 மற்றும் 90களில் பிறந்தவர்கள் தங்களது காதல் வாழ்க்கையில் காதலை சொல்ல முடியாமல் தவிக்கும் போது எல்லாம் அவர்களின் நண்பர்கள் இதயம் முரளி என்று முரளியின் கதாப்பாத்திரத்தை வைத்தே கிண்டலடிப்பது வழக்கம். இந்த உலகில் சொல்லாக் காதல்கள் அதிகம். தமிழ் மக்களுக்கு அதற்கான எடுத்துக்காட்டான படமாக இருந்தது நடிகர் முரளி நடிப்பில் வெளியான இதயம். இந்த வசனம் நடிகர் முரளியின் மறைவிற்குப் பிறகும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முரளியின் மூத்த மகன் அதர்வா முரளி தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் நாயகனாக வலம் வரும் நிலையில் அவரது நடிப்பில் இதயம் முரளி என்ற பெயரில் படம் ஒன்று உருவாகி வருகின்றது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி வருகிறார். இவர் தனது டான் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் படத்தை தயாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோகர் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் நட்டி, தமன் எஸ், நிஹாரிகா, ரக்ஷன், டிராவிட், ஏஞ்சலின், அஞ்சு குரியன், சுதாகர், யஷஸ்ரீ, ஜோனிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இதயம் முரளி படத்திலிருந்து வெளியானது வான் வான் பாடல்:
இசையமைப்பாளர் தமன் எஸ் இந்தப் படத்தில் நடித்தது மட்டும் இன்றி இசையமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். இந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு இதயம் முரளி படத்தில் இருந்து வான் வான் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள நிலையில் மோஹித் சவுகான் பாடலைப் பாடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது வெளியாகி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… தியேட்டரில் 50 நாட்களைக் கடந்த சிறை படம்… கொண்டாட்டத்தில் படக்குழு
இசையமைப்பாளர் தமன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#VaanVaan 🌈#IdhayamMuraliThirdSingle Is HERE 🌼
Let’s keep falling In love ❤️🫧🦋
Enjoy ☃️📈🙌🏿🏆🫠https://t.co/czysPagHXS
— thaman S (@MusicThaman) February 13, 2026
Also Read… Ajith Kumar: ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடிக்கும் அஜித் குமார் – இணையத்தில் பரவிவரும் பதிவு!