ஓடிடியில் பராசக்தி படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்

Uncensored Parasakthi Movie Version: தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றப் படம் பராசக்தி. இந்தப் படத்தின் தணிக்கை செய்யப்படாத வெர்ஷனைப் படக்குழு தற்போது ஓடிடியில் வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிடியில் பராசக்தி படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ் - உற்சாகத்தில் ரசிகர்கள்

பராசக்தி

Published: 

12 Feb 2026 15:48 PM

 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் 25-வது படமாக கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. நடிகர் சிவ்கார்த்திகேயன் நடிப்பில் உருவான இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியான பிறகு மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீ லீலா, பிரித்விராஜன், குளப்புள்ளி லீலா, குரு சோமசுந்தரம், சேத்தன் ஆகியோருடன் இணைந்து நடிகர்கள் பேசில் ஜோசஃப், ராணா டகுபதி ஆகியோர் கேமியோ ரோலில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் ஆகாஸ் பாஸ்கரன் டான் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் ஜிவி பிரகாஷின் இசையில் வெளியாகும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் தற்போது ஓடிடியில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஓடிடியில் பராசக்தி படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்:

சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த பராசக்தி படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜீ 5 ஓடிடியில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துவரும் நிலையில் தணிக்கைச் செய்யப்படடத வெர்ஷனை ஓடிடியில் வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து பராசக்திப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த டாடா படம்… இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு

ஜீ 5 தமிழ் ஓடிடி நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Dhanush: நான் நடிக்கவருவதற்கு முன் அந்த வேலையில் ஆர்வம் அதிகம்.. ஆனால் – தனுஷ் பகிர்ந்த விஷயம்!

Related Stories
பிப்ரவரி 14 பலருக்கு ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்னு நினைக்கிறேன் – தனுஷ் உடனான திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாக்கூர்
தொடர் தோல்வி படங்கள்.. 2 ஆண்டுக்கும் மேல் எந்த படமும் இல்லை – இந்த போட்டோவில் இருக்கும் சிறுவன் எந்த நடிகர் தெரியும்?
தனுஷைப் பார்த்து கற்றுக்கொண்டேன்… செல்வராகவன் சொன்ன விசயம்
Ayyanar Thunai: அய்யனார் துணை சீரியல் ரசிகர்களே இது உங்களுக்கு தெரியுமா? பிரபலங்களின் சம்பள விவரம் இதோ!
மௌனம் பேசியதே ரீ-ரிலீஸ் படத்தை கண்டிப்பாக பாருங்க – திரிஷா கிருஷ்ணன் வெளியிட்ட வீடியோ!
சூர்யாவை தொடர்ந்து வெங்கி அட்லூரி அடுத்து இயக்கப் போவது இந்த பிரபல நடிகரா? வைரலாகும் தகவல்
அமெரிக்க வெளியிட்ட வரைபடத்தில் இந்தியாவுடன் சேர்க்கப்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்
ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்கப்பட்ட விமான படைத்தளங்களை சீரமைக்கும் பாகிஸ்தான்
ஆவேசம் 2 படம் ரிலீஸ் எப்போது? நடிகர் ஃபஹத் ஃபாசில் கொடுத்த அப்டேட்
ஒரு சக்தி என் உடலுக்குள் நுழைந்தது.. நடிகை சுதா சந்திரன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்