Trisha Krishnan: தனது ஸ்பெஷல் தினத்தில்.. திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த திரிஷா கிருஷ்ணன்!

Trisha Krishnan's 43rd Birthday: நடிகை திரிஷா கிருஷ்ணன், இன்று 2026 மே 4ம் தேதியில், தனது 43வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதை முன்னிட்டு அதிகாலையில் திருப்பதி ஏழுமலையானை சிறப்பாக தரிசித்துள்ளார். தரிசனத்தை முடித்த திரிஷாவிடம் பல ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

Trisha Krishnan: தனது ஸ்பெஷல் தினத்தில்.. திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த திரிஷா கிருஷ்ணன்!

திரிஷா கிருஷ்ணன்

Updated On: 

04 May 2026 08:52 AM

 IST

கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவர் கடந்த 2002ம் ஆண்டில் இயக்குநர் அமீர் (Ameer) இயக்கத்தில் வெளியான, “மௌனம் பேசியதே” (Mounam Pesiyadhe) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சினிமாவை அறிமுகத்திற்கு முன் மாடலிங் துறையில் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை கடந்தும், இன்னும் தென்னிந்திய மொழிகளில் கதாநாயகியாகவே நடித்துவருகிறார். அந்த வகையில் கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் இவரின் நடிப்பில் மொத்தம் 5 படங்கள் வெளியாகியிருந்தது. அதில் கிட்டத்தட்ட 2 படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படம் கருப்பு (Karuppu). இதில் நடிகர் சூர்யாவிற்கு (Suriya) ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று 2026 மே 04ம் தேதியில் நடிகை திரிஷா கிருஷ்ணன் தனது 43வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார் (Trisha Birthday). அந்த வகையில் நேற்று (03/05/2026) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருப்பதி (Tirupati) செல்வதாக பதிவிட்டிருந்தார். அதன்படி தனது பிறந்தநாளை முன்னிட்டு, அதிகாலையில் நடந்த சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டார். மேலும் சுவாமி தரிசனத்தை முடித்துவந்த திரிஷாவிடம் ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க: பிரபல நடிகையுடன் மோதலா? அந்த நடிகர்தான் காரணமா? – திரிஷாவே சொன்ன உண்மை!

திருப்பதியில் திரிஷாவிடம் ரசிகர் ஒருவர் சொன்ன விஷயம்:

பிறந்தநாளில் சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு வந்த திரிஷாவிடம், பலரும் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்திருந்தனர். அப்போது ரசிகர் ஒருவர், “ரிசல்ட் பக்கா மனதே” “இன்று ரிசல்ட் நம் பக்கம்தான்” என தெரிவித்திருந்தார். அதற்கு திரிஷா புன்னகைத்தபடி கடந்து சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜியின் வளர்ச்சியை வியந்து பார்க்கிறேன்.. கருப்பு பட கதையை கேட்டதும் உடனே ஓகே சொல்லிட்டேன் – சூர்யா பேச்சு!

திருப்பதியில் திரிஷா சுவாமி தரிசனம் செய்தது தொடர்பான வீடியோ பதிவு:

நடிகை திரிஷா தனது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவரும் நிலையில், இன்று அவரின் புதிய படங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் கருப்பு படத்திலிருந்து இவரின் கதாபத்திரம் குறித்து முக்கிய அப்டேட் வரலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..