Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

Narivetta Movie OTT Update: நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான படம் நரிவேட்டை. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறித்து தற்போது இந்த செய்தியில் விளக்கமாக பார்க்கலாம்.

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான டொவினோ தாமஸின் நரிவேட்டை படம் – எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
நரிவேட்டைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Dec 2025 21:49 PM IST

மலையாள சினிமாவில் கடந்த மே மாதம் 23-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நரிவேட்ட. 2003-ம் ஆண்டு முதங்கா பழங்குடியினர் நடத்திய போராட்டத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தை அருண் ராஜ் மனோகர் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன், ஆர்யா சலீம், பிரியம்வதா கிருஷ்ணன், பிரணவ் தியோபின், பிரசாந்த் மாதவன், ரினி உதயகுமார், நந்து, ஸ்ரீகாந்த் முரளி, பாதுஷா என்.எம். குமார் சேது, டாக்டர். விஜேஷ் லீ, ஷாஹி கபீர் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான இந்தியன் சினிமா கம்பெனி சார்பாக தயாரிப்பாளர்கள் திப்புஷன் மற்றும் ஷியாஸ் ஹாசன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

டொவினோ தாமஸின் நரிவேட்டை படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?

நடிகர் டொவினோ தாமஸ் கேரள மாநிலத்தில் உள்ள ஆழப்புழாவில் தனது அம்மா உடன் வாழ்ந்து வருகிறார். வேலை இல்லாமல் இருக்கும் இவருக்கு காதலும் இருக்கிறது. தனது காதலியின் வீட்டில் விசயம் தெரிந்து பிரச்சனை ஆனதைத் தொடர்ந்து தனக்கு பிரிக்கவே இல்லை என்றாலும் கேரள போலீஸில் கான்ஸ்டேபில் வேலைக்கு சேர்கிறார். அங்கு சேர்ந்த பிறகும் பரிச்சை எழுதி மாற வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்.

Also Read… யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஒரு பேரே வரலாறு பாடல்

இந்த நிலையில் வயநாட்டில் நடைபெறும் பழங்குடியினரின் போராட்டத்திற்கு தனது போலீஸ் குழுவுடன் செல்கிறார். அப்படி சென்ற இடத்தில் தன்னுடன் வந்த தனக்கு மிகவும் பிடித்த சீனியர் போலீஸ் சுராஜ் வெஞ்சரமூடு கொள்ளப்படுகிறார். அந்த கொலைக்கான காரணத்தை விசாரித்த டொவினோ தாமஸிற்கு பல உண்மைகள் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அவர் என்ன செய்தார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… விரைவில் வெளியாகும் சூர்யா 47 பட புரோமோ… வைரலாகும் போட்டோ