ஆஸ்கர் விருது பரிந்துரைகளுக்கான இறுதிப் போட்டியில் இடம் பிடித்தது டூரிஸ்ட் ஃபேமிலி படம்
Tourist Family: தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை படக்குழு ஆஸ்கர் விருது விழாவிற்கு அனுப்பி வைத்த நிலையில் படம் இறுதிப் போட்டிக்கு தேர்வாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி
தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தற்போது பெரிய பட்ஜெட்டில் ஸ்டார் நடிகர்கள் நடிக்கும் படங்கள் மட்டும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறாமல் சிறிய பட்ஜெட்டில் சின்ன சின்ன நடிகர்கள் நடிக்கும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டும் இன்றி சிறிய பட்ஜெட்டில் வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் கடந்த 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ரசிகர்கள் முதலாவதாக கொண்டாடியப் படம் என்றால் அது டூரிஸ்ட் ஃபேமிலி என்று கூறலாம்.
அதன்படி அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் அறிமுக வீடியோ வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து படம் கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சிம்ரன் நாயகியாக நடித்து இருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது.
ஆஸ்கர் விருது இறுதிப் போட்டியில் இடம் பிடித்தது டூரிஸ்ட் ஃபேமிலி:
இலங்கையில் இருந்து பொருளாதார நெறுக்கடிக் காரணமாக தமிழகத்திற்கு வரும் குடும்பம் எப்படி இங்கு உள்ள மக்களுடன் இணைந்து வாழ்கிறார்கள் என்று வலி மிகுந்த கதையை ஃபீல் குட் படமாக ரசிகர்களிடையே கொண்டு சேர்த்ததற்காக இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை மக்கள் கொண்டாடினர். இந்த நிலையில் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை ஆஸ்கர் விருது விழாவிற்கு படக்குழு அனுப்பி வைத்துள்ளது.
இதில் மொத்தம் உலகம் முழுவதும் இருந்து பல மொழிகளில் 317 படங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த படங்களில் இருந்து இறுதிப் போட்டிக்கு 201 படங்களை மட்டுமே ஆஸ்கர் விருது வழங்கும் குழு தேர்ந்தெடுத்துள்ளது. அந்தப் பட்டியளில் தமிழ் மொழியில் இருந்து அனுப்பப்பட்ட டூரிஸ்ட் ஃபேமிலி இடம் பிடித்து உள்ளது. இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… ஆண் – பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இயக்குநர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்… இயக்குநர் சுதா கொங்கரா
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#TouristFamily is in the final contention for Oscar Nominations in the Best Picture category. Proud moment for Tamil Cinema..💥 Debut Director #AbishanJeevinth‘s Tharamana Sambavam..🤝 pic.twitter.com/tawQtr57J1
— Laxmi Kanth (@iammoviebuff007) January 9, 2026
Also Read… சாண்ட்ராவின் உண்மை முகம் தெரிந்ததும் கோபப்படும் திவ்யா… வைரலாகும் வீடியோ