Abhishan Jeevinth: காதலியை கரம்பிடித்த டூரிஸ்ட் பேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.. குவியும் வாழ்த்துகள்!
Abhishan Jeevinth Wedding: டூரிஸ்ட் பேமிலி என்ற திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமானவர் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். இவர் தனது நீண்டநாள் காதலியான அகிலாவை இன்று பெற்றோரின் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

அபிஷன் ஜீவிந்த் திருமணம்
நடிகர்கள் சசிகுமார் (Sasiikumar) மற்றும் சிம்ரனின் (Simran) நடிப்பில் வெளியான திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி (Tourist Family). இந்த படமானது இலங்கையில் இருந்து தப்பித்துவந்த குடும்பம், எவ்வாறு சென்னையில் தங்களின் வாழ்க்கையை தொடங்குகிறார்கள் என்பது குறித்த பீல் குட் படமாக வெளியாகியிருந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குநரான அபிஷன் ஜீவிந்த் (Abhishan jeevinth) என்பவர் இயக்கியிருந்தார். இவர் இப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரும் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இயக்குநராக சினிமாவில் வாழ்க்கையை தொடங்கிய இவர், தற்போது ஹீரோவாகவும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். மேலும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், டூரிஸ்ட் பேமிலி படத்தின் ரிலீஸ் நிகழ்ச்சியின்போதே மேடையில் தனது காதலியான அகிலா (Akila) என்பவரை புரொபோஸ் செய்திருந்தார்.
இந்த விஷயமானது அகிலா என்பவருக்கும் மிகவும் சர்ப்ரைஸாக இருக்கும் விதத்தில் மேடையில் கூறியிருந்தார். மேலும் தனது திருமணம் வரும் 2025 அக்டோபர் 31ம் தேதியில் நடக்கும் என்றும் அறிவித்திருந்தார். அதன்படி இன்று 2025 அக்டோபர் 31ம் தேதியில் இவர்கள் இருவரும் பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஜாய் கிரிசில்டாவிற்கு பிறந்த ஆண் குழந்தை.. வைரலாகும் போஸ்ட்!
இணையத்தில் வைரலாகும் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அகிலாவின் திருமண புகைப்படங்கள்:
#TouristFamily Director #Abishan gets married ♥️✨
During the Pre release event he proposed to his girlfriend Akkila & announced that he is marrying on Oct 31st. He executed what he said😀🫶 pic.twitter.com/8PB5hN1YNb
— Cv’ (@cinivilla) October 31, 2025
இவர்கள் இருவரும் இன்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக தங்களின் திருமணத்த நடத்தியுள்ளனர். மேலும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் , தான் அறிவித்த நாளிலேயே தனது திருமணத்தை நடத்திக்காட்டிவிட்டார் என்றும் இணையத்தில் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். மேலும் இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பல்வேறு நபர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அபிஷன் ஜீவிந்தின் புதிய படம்
இயக்குநராக நுழைந்த இவர், தற்போது சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். இவர் நடித்துவரு புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் ராங்கி, 7ஜி ரெயின்போ காலனி 2 போன்ற படங்ககளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகிவரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ளார்.
இதையும் படிங்க: நடிகர் என்பது ஒரு அருவருப்பான வேலை.. மறைமுகமாக பிரபல நடிகரை தாக்கிய மாரி செல்வராஜ்!
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 45 நாட்களில் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தை ரஜினிகாந்தின் 2வது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் 2025ம் ஆண்டு இறுதியில் அல்லது 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.