பறவையே எங்கு இருக்கிறாய்… பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 9-ம் ஆண்டு நினைவு தினம்!

lyricist and writer Na Muthukumar: தமிழ் சினிமாவின் பொக்கிஷம் மறைந்து இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ஆம் பிரபல பாடலாசிரியர் நா முத்துக்குமார் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்து இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவரது ரசிகர்கள் அவரின் பாடல் வரிகளை பதிவிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பறவையே எங்கு இருக்கிறாய்... பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 9-ம் ஆண்டு நினைவு தினம்!

நா.முத்துக்குமார்

Published: 

14 Aug 2025 14:38 PM

தமிழ் சினிமாவில் பல நூறு பாடல்களை எழுதி ரசிகர்களின் மனதில் நங்கூரமாக பதிந்தவர் எழுத்தாளரும் பாடலாசிரியருமான நா. முத்துக்குமார் (Na Muthukumar). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் இறப்பு சினிமா பிரபலங்கள் மற்றும் அவரது குடும்பத்தினை தாண்டி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கு அவர்களின் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பு போல வருத்தத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் நா முத்துக்குமார் ஒரு பாடலாசிரியராக மட்டும் இல்லாமல் தனது பாடல்களால் தனிமையில் இருப்பவர்களில் இருந்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பவர்கள் வரை அனைவரிடம் உரையாடி இருக்கிறார். ஆம் தமிழ் புரிந்த எந்த ஒரு நபருக்கும் நா முத்துகுமாரின் பாடல் வரிகள் பிடிக்காமல் இருக்காது. அப்படி மனதிற்கு நெறுக்கமான பாடல்கள் பலவற்றை நா முத்துக்குமார் கொடுத்துள்ளார்.

குறிப்பாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் பாடலாசிரியர் நா முத்துக்குமார் வரிகளில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இவர்களின் காம்போ ஒரு படத்தில் இருக்கிறது என்றால் அது நிச்சயமாக வெற்றியடையும் என்பது ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்:

தமிழ் சினிமாவின் ரசிகர்களின் காதல், பாசம், சோகம், பிரிவு என அனைத்து விதமான எமோஷன்களுக்கும் பொருந்தும் பாடல்களை எழுதி உள்ளார் நா முத்துக்குமார். 1999-ம் ஆண்டு தொடங்கிய இவரது சினிமா வாழ்க்கை 2019-ம் ஆண்டு வரை நீடித்துள்ளது. ஆம் இவர் 2016-ம் ஆண்டு உயிரிழந்தாலும் அவர் முன்னதாக எழுதியப் பாடல்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியாகி ரசிகர்களின் நெஞ்சங்களை கனக்க வைத்தது.

நா முத்துக்குமாரின் பாடல் வரிகளைப் போல உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் பேசும் என்று கற்றது தமிழ் படத்தில் அவர் எழுதிய பாடலைப் போல அவர் தற்போது உயிருடன் இல்லை என்றாலும் அவரது பாடல் வரிகள் தமிழ் ரசிகர்களிடம் பேசிக்கொண்டே இருக்கும். அதே போல கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி என்று தீபாவளி படத்தில் அவர் எழுதிய பாடல் வரிகளைப் போல நா முத்துக்குமார் இறந்தும் தமிழ் ரசிகர்களின் மனதில் வாழ்ந்துகொண்டே இருக்கிறார்.

Also Read… ஷௌபின் ஷாகிர் நடிப்பை பார்த்து வியந்த ரஜினிகாந்த்: யார் இவர் தெரியுமா?

நா முத்துகுமார் குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட பதிவு:

Also Read… 15 வருடங்களை நிறைவு செய்த காதல் சொல்ல வந்தேன் படம்… எந்த ஓடிடியில் பார்க்கலாம்?