டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழு மீது வழக்கு போட சொன்னாங்க… ஆனால் – நடிகர் தியாகராஜன் ஓபன் டாக்

Tourist Family: சமீபத்தில் வெளியான் டூரிஸ்ட் ஃபேமிலி படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் மீது வழக்கு போட சொன்னாங்க என்று நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழு மீது வழக்கு போட சொன்னாங்க... ஆனால் - நடிகர் தியாகராஜன் ஓபன் டாக்

தியாகராஜன்

Published: 

05 Jun 2025 06:30 AM

கடந்த மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abishan Jeevind) இயக்கத்தில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போதே ரசிகர்கள் இதனை கொண்டாடித் தீர்த்தனர். திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் பிரசாந்த் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான மம்பட்டியான் படத்தில் இருந்து மலையூரு நாட்டாம என்ற பாடலை பயன்படுத்தி இருந்தனர். டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இது ஒரு முக்கியமான காட்சி என்றே சொல்லலாம். படத்தில் இந்த காட்சி வரும் போது திரையரங்கமே சிரிப்பு அலையில் மூழ்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மலையூரு நாட்டாம பாடலுக்கு அனுமதி வாங்கினாங்களா?

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் தியாகராஜனிடம் செய்தியாளர் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழு மம்பட்டியான் பட பாடலை பயன்படுத்த அனுமதி கோரினார்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய தியாகராஜன் அவர்கள் அனுமதி எல்லாம் வாங்கல ஆனா பாட்டு திரும்ப மக்களிடம் ஹிட் ஆனது எனக்கு ரொம்ப சந்தோசம். நான் படக்குழுவை வாழ்த்தினேன் என்று தெரிவித்தார்.

காப்பி ரைட்ஸ் வழக்கு ஏன் போடவில்லை?

படத்தில் பாடலை அனுமதி இல்லாம பயன்படுத்திவிட்டார்கள் என்று பலர் என்னிடம் வழக்கு போடுங்க காசு கேளுங்க அவங்ககிட்டனு சொன்னாங்க. ஆனா எனக்கு அதில விருப்பம் இல்ல நான் தான் அவங்களுக்கு நன்றி சொல்லனும். ஏன்னா இத்தனை வருஷம் ஆன பிறகு அந்தப் பாடல் திரும்ப ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறுவதற்கு அந்தப் படம் தான் காரணம் எனக்கு காசு பெரிய விசயம் இல்ல என்றும் நடிகர் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.

ரசிகர்களிடம் பிரபலமான மலையூரு நாட்டாம பாடல்:

உண்மையிலேயே டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் மலையூரு நாட்டாம பாடல் பயன்படுத்தப்பட்ட பிறகு அது மக்களிடையே மீண்டும் பிரபலம் ஆனதா என்று கேட்டால் அது அப்படி இல்லை. இந்தப் படத்தில் பாடல் வந்த காட்சியும் பாடல் முன்னறே ரசிகர்களிடம் பரிச்சையமானதும் தான் அந்த படத்திற்கு பலம் சேர்த்தது என்று சொல்லலாம்.

சமூக வலைதளங்களில் கடந்த சில வருடங்களாகவே பெண்கள் தங்களது திருமண மேடைக்கு என்ட்ரி கொடும்கும் போது மலையூரு நாட்டாம பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டு வருவது வழக்கம். அப்படி இருக்கையில் தன்னை காதலித்து ப்ரேக் அப் செய்துவிட்டு வேறு நபருக்காக இந்தப் பாடலை தனது காதலி ஆடுவது போல சமூகத்தில் பரவலாக கருத்து நிலவி வருகின்றது.

படத்தில் வைரலான அந்த காட்சி:

இந்த மாதிரியான ஒரு காட்சியை படத்தில் வைத்த இயக்குநர் இந்தப் பாடலை அங்கு பயன்படுத்தியது ரசிகர்களால் ஈசியாக கனெக்ட் செய்ய உதவியது என்றும் சொல்லலாம். அதன் காரணமாகவே அந்த காட்சியும் படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.