பராசக்தி படத்திலிருந்து வெளியானது நமக்கான காலம் பாடல் வீடியோ!

Namakkana Kaalam Video Song | நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. இந்தப் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தில் இருந்து நமக்கான காலம் பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது.

பராசக்தி படத்திலிருந்து வெளியானது நமக்கான காலம் பாடல் வீடியோ!

நமக்கான காலம் பாடல் வீடியோ

Published: 

01 Feb 2026 15:02 PM

 IST

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பல புதுப் படங்கள் திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் நடிகர்கள் கார்த்தி, ஜீவா மற்றும் சிவகார்த்திகேயனின் படங்கள் வெளியானது. அதன்படி இந்த மூன்று நடிகர்களின் படங்களில் நடிகர் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர்கள் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயனின் படங்களான வா வாத்தியார் மற்றும் பராசக்தி படங்கள் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படத்தில் சிவகார்திகேயனுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படம் சுமார் ரூபாய் 100 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தப் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தில் இருந்து பாடல்களின் வீடியோ தொடர்ந்து வெளியாகி வருகின்றது.

பராசக்தி படத்திலிருந்து வெளியானது நமக்கான காலம் பாடல் வீடியோ:

இந்த நிலையில் இந்தப் பாடலை ஹரிசரண், நகாஷ் அஜீஸ், வேல்முருகன் ஆகியோ இணைந்து பாடியுள்ள நிலையில் பாடல் திரையரங்குகளில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்த நமக்கான காலம் பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடிக்கும் டிசி படத்தின் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்

பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு;

Also Read… சிறந்த வில்லனாக தேர்வான அர்ஜுன் தாஸ்… மகிழ்ச்சியில் வெளியிட்ட எக்ஸ் போஸ்ட்

Follow Us
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி