விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட ரணபாலி படக்குழு
Ranabaali Movie Team Released Video For Vijay Devarakonda Birthday Special: நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு ரணபாலி படக்குழு வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரணபாலி
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவருக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் உள்ள பல நடிகைகள் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் மக்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்ற ஜோடியாக உள்ளது விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடி. இவர்களின் ஜோடி திரையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் நிஜத்திலும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து தற்போது நிஜ ஜோடியாக மாறியது அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் இருவரும் இறுதியாக கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இணைந்து நடித்தது இருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து தற்போது தான் இணைந்து நடித்து வருகின்றனர். 6 வருடங்களுக்குப் பிறகு இவர்களின் ஜோடி இணைந்து திரையரங்குகளில் காட்சியளிக்க உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரணபாலி படக்குழு வெளியிட்ட பர்த்டே ஸ்பெஷல் வீடியோ:
இந்த நிலையில் இன்று 09-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்கள் மற்றும் படக்குழுவினர் போஸ்டர்களை வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து நடிக்கும் ரணபாலி படக்குழுவினரும் தங்களது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு விஜய் தேவரகொண்டாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… ரிலீஸ் தேதியை லாக் செய்தது சட்டென்று மாறுது வானிலை படம்
ரணபாலி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Happy Birthday to our stallion @TheDeverakonda ❤🔥
-Team #Ranabaali
Get ready for peak VD in a peak cinema 💥💥
Grand release worldwide on September 11th 🔥@TheDeverakonda @iamRashmika @Rahul_Sankrityn @MythriOfficial #ArnoldVosloo… pic.twitter.com/yKDEqBSzP1
— Mythri Movie Makers (@MythriOfficial) May 9, 2026
Also Read… திரையரங்குகளில் 50 நாட்களை நிறைவு செய்த துரந்தர் தி ரிவெஞ்ச்.. ஓடிடி ரிலீஸில் டுவிஸ்ட்..!