ஆதிரையை எதுக்கு உள்ளவிட்டிங்க.. பிக் பாஸையே கேள்விகேட்டு கம்ருதீன்- வினோத்.. ரசிகர்களிடையே எழுந்த சர்ச்சை!
Kamruddin, Gana Vinoth And Aadhirai Fight: பிக் பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியானது தமிழில் தொடக்கத்திலிருந்தே சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. மற்ற சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசன் 9ன் மீது அதிக சர்ச்சைகள் எழுந்துவருகிறது . இந்நிலையில் இன்று டிசம்பர் 8ம் தேதியில் வெளியான 3வது ப்ரோமோ தற்போது மேலும் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.

பிக் பாஸ் சீசன் 9 தமிழ்
பான் இந்தியா அளவிற்கு மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக பிக் பாஸ் (Bigg Boss) இருந்துவருகிறது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியானது தமிழில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இதுவரை 8 சீசங்கள் வெளியான நிலையில், கடந்த 2025 அக்டோபர் 5ம் தேதி முதல் பிக் பாஸ் சீசன் 9 (Bigg Boss Season 9) நிகழ்ச்சியானது தொடங்கியிருந்தது. சுமார் 20 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், ஆரம்பத்திலிருந்தே இந்த நிகழ்ச்சியில் பல சர்ச்சைகள் இருந்துவந்தது. இந்த நிகழ்ச்சியில் சுத்தமாக ஒழுக்கம் இல்லை என்றே கூறலாம், அந்த வகையில் 3வது வாரத்தில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் 4 பேர் நுழைந்திருந்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது தொடங்கி தபோது 10 வாரமான நிலையில் மொத்தம் 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இன்று 2025 டிசம்பர் 8ம் தேதியில் வெளியான புரோமோ ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது.
முதல் புரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் டாஸ்க் நடந்தது, மேலும் இரண்டாவது புரோமோவில் அரோரா (Aurora Sinclair) மற்றும் கம்ருதீனுக்கு (Kamruddin ) இடையே பெரும் சண்டையை வெடித்திருந்தது. இந்நிலையில் தற்போது வெளியான 3வது புரோமோவில் ஆதிரை (Aadhirai) மற்றும் கம்ருதீனுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் இதில் கானா வினோத்தும் (Gana Vinoth) நுழைந்த நிலையில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மற்ற அணிகளை தொந்தரவு செய்யாதீர்கள்.. செல்லமாக ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த அஜித் குமார்!
பிக்பாஸ் சீசன் 9 தமிழ் நிகழ்ச்சியில் 64வது நாளின் 3வது புரோமோ வீடியோ பதிவு :
#Day64 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/V5KFOYHwTb
— Vijay Television (@vijaytelevision) December 8, 2025
இந்த வீடியோவில் அரோரா கிளப்பிய பிரச்சனை தொடர்பாக கம்ருதீன், ஆதிரையிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். மேலும் கம்ருதீன், ஆதிரையை பற்றி அவருக்கு ஒரு திறமையும் இல்லை, வெறும் பேச்சு மட்டும்தான் விளையாட தெரியவில்லை என அவரை தாக்கும் விதத்தில் பேசுகிறார். இப்படி போசும்போது, கானா வினோத் இடையே தகாத வார்த்தையால் ஆதிரையை குறிப்பிட்டுள்ளார். இதில் காண்டான ஆதிரை, கானா வினோத்தையும் எதிர்த்து பேசினார். மேலும் பிக் பாஸ் கேமராவை பார்த்து கம்ருதீன், ஆதிரையை ஏன் உள்ளே விடீங்க என பிக் பாஸையே மரியாதை இல்லாமல் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: வித்தியாசமான முறையில் நடந்த இந்தவார நாமினேஷன்.. வைரலாகும் புரோமோ!
இதுவரை வெளியான சீசன்களில் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தத்க்கது. இதன் காரணமாக தற்போது வெளியான இந்த் வீடியோ ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கானா வினோத்தை புகழ்ந்த ரசிகர்கள் தற்போது அவரின் அழிவு ஆரம்பம் என கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். இந்த சீசன் மீது மீண்டும் ரசிகர்களிடையே சர்ச்சை எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.