19 ஆண்டுகளை நிறைவு செய்தது கார்த்தி நாயகனாக அறிமுகமான பருத்திவீரன் படம்

19 Years Of Paruthiveeran Movie : தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நாயகனாக அறிமுகம் ஆன படம் பருத்திவீரன். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனை தற்போது கார்த்தியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

19 ஆண்டுகளை நிறைவு செய்தது கார்த்தி நாயகனாக அறிமுகமான பருத்திவீரன் படம்

பருத்திவீரன் படம்

Published: 

23 Feb 2026 14:37 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பருத்திவீரன். இயக்குநர் அமீர் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே நடிகர் கார்த்தி தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தார். கிராமத்தில் சண்டியராக சுற்றித்திரியும் இளைஞரின் கதாப்பாத்திரத்தில் நடிகர் கார்த்தி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகளை நிறைவு செய்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த பருத்தி வீரன் படத்தில் நடிகர் காத்தி உடன் இணைந்து நடிகர்கள் பிரியாமணி,
சரவணன், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சுஜாதா சிவகுமார், சம்பத் ராஜ், அம்முலு, பஞ்சவர்ணம், செவ்வாலை ராசு, சமுத்திரக்கனி மு ராமசுவாமி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

19 ஆண்டுகளை நிறைவு செய்தது கார்த்தியின் பருத்திவீரன் படம்:

ரொமாண்டிக் ஆக்‌ஷன் காமெடி பாணியில் உருவாகி இருந்த இந்த பருத்திவீரன் படத்தில் சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்த கார்த்தி தனது பாட்டி மற்றும் சித்தப்பாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். இவர் சிறு வயதி இருந்தே அதிக செல்லமாக வளர்ந்ததால் கிராமத்தில் சண்டியர்தனம் செய்துக்கொண்டு திரியும் இளைஞனாக வலம் வருகிறார்.

Also Read… ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவான விமலின் வடம் – வைரலாகும் ட்ரெய்லர்!

இவரை துரத்தி துரத்தி காதலிக்கும் முறைப்பெண்ணாக நடிகை பிரியாமணி நடித்து இருப்பார். முதலில் பிரியாமணியின் காதலை ஏற்க மறுக்கும் கார்த்தி பிறகு அவருடன் இணைந்து வாழ ஆசைப்படுகிறார். சண்டியர்தனத்தை விட்டுவிட்டு பிரியாமணியுடன் வாழவேண்டும் என்று கார்த்தி நினைத்த்போது அவரின் பழையை பகையின் காரணமாக பிரியாமணி பலாத்தாரம் செய்யப்படுகிறார். அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நடிகர் கார்த்தியும் சினிமாவில் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… Priyanka Chopra: பல கட்டுப்பாடுகள்.. ஹாலிவுட் சினிமாவிற்கு சென்ற காரணம் இதுதான் – பிரியங்கா சோப்ரா!

ஒரு மில்லியன் ரீல்ஸ் - அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் கொண்டாட்டம்
நடிகர் சல்மான் கானின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
ஈரானை தாக்க தயாராகும் அமெரிக்கா - வெளியான பரபரப்பு தகவல்
கார்திக் சுப்புராஜ் படத்தில் நடிகர் சுஹாஸ்!