AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவான விமலின் வடம் – வைரலாகும் ட்ரெய்லர்!

VADAM Movie Official Trailer | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நடிகர் விமல். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் வடம். ஜல்லிகட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவான விமலின் வடம் – வைரலாகும் ட்ரெய்லர்!
வடம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Feb 2026 17:00 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் விமல் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து பெரும்பாலான படங்கள் கிராமத்து கதையை மையமாக வைத்து வெளியாகி வருகிறது. படங்கள் மட்டும் இன்றி இணையதள தொடர்களிலும் கிராமத்து கதைகளை மையமாக வைத்தே நடிகர் விமல் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் விமல் நடிப்பில் அடுத்தடுத்து 6 படங்கள் வெளியானது. இதில் இரண்டு படங்களில் கேமியோ ரோலிலும் 4 படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விமல் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மஹாசேனா. இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விமல் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வடம். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இணையத்தில் வைரலாகும் நடிகர் விமலின் வடம் பட ட்ரெய்லர்:

இயக்குநர் கேந்திரன் வி எழுதி இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் பகை ஆகியவையை மையமாக வைத்து உருவாகி உள்ளது ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது. அதிக அளவில் ஜல்லிக்கட்டை இந்தப் படத்தில் காட்டியுள்ளனர். மேலும் பகையால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் அதனை எப்படி நாயகன் விமல் சரி செய்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் வருகின்ற மார்ச் மாதம் 6-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Thaai Kizhavi: ‘மாட்டிகிட்டான் மைனர்குஞ்சு’.. தாய் கிழவி பட 2வது பாடல் வெளியானது!

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அசோக் செல்வன் நடிப்பில் மீண்டும் ஒரு ஃபீல் குட் படம் – வைரலாகும் பேட்டி!