OTT Movie: ‘லக்கி தி சூப்பர் ஸ்டார் முதல் ஹாட் ஸ்பாட் 2 மச்’ வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள் லிஸ்ட்!
This Weeks Top OTT Releases: தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இந்த வாரத்தில் தமிழில் லக்கி திரைப்படம் முதல் சத்தா பச்சா வரை, ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் லிஸ்ட் குறித்து விவரமாக பார்க்கலாம்.
லக்கி தி சூப்பர் ஸ்டார் திரைப்படம் (Lucky Movie): தமிழில் சிறந்த இசையமைப்பாளராகவும், கதாநாயகனாகவும் கலக்கிவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar). இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் மட்டும் கிங்ஸ்டன் (Kinston) மற்றும் பிளாக்மெயில் என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. ஆனாலும் இந்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அந்த வகையில் இவரின் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ள திரைப்படம் லக்கி தி சூப்பர் ஸ்டார் (lucky The Superstar). இப்படத்தை இயக்குநர் உதய மகேஷ் இயக்கியுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் அனஸ்வரா ராஜன் (Anasawara Rajan) இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது இன்று 2026 பிப்ரவரி 20ம் தேதியில் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotsatr) ஓடிடியில் வெளியாகியுள்ளது. தற்போது இப்படமானது ஓடிடியில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணி படம் – முக்கிய வேடத்தில் இணையும் பிரபல நடிகை?




லக்கி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த எக்ஸ் பதிவு:
Meet me. Know me. Love me more 🐾❤️
I’m all yours from now 🐶▶️ https://t.co/aThTI3tq9B#HotstarSpecials #LuckyTheSuperstar now streaming only on #JioHotstar #LuckyTheSuperstarOnJioHotstar #LuckyTheSuperstarMovie #LuckyTheSuperstarMovieOnJHS #LuckyTheSuperstarNowStreaming… pic.twitter.com/dlFbWhflZz
— JioHotstar Tamil (@JioHotstartam) February 19, 2026
ஹாட் ஸ்பாட் 2 மச் திரைப்படம் (Hot spot 2 much) :
தமிழில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் (Vignesh Karthik) இயக்கத்தில் கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியான திரைப்படம் ஹாட் ஸ்பாட் 2 மச். இந்த படத்தில் நடிகர்கள் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ரக்ஷன், அஸ்வின் குமார், பவனி ஸ்ரீ மற்றும் சஞ்சனா திவாரி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ள இப்படமானது, 2026 ஜனவரி 23ம் தேதியில் வெளியாகியுள்ளது. இப்படமானது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அமேசான் பிரைம், ஆஹா தமிழ், சிம்ப்ளி சவுத் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கார்த்தியின் கைதி 2 திரைப்படம் உருவாகிறதா? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
சத்தா பச்சா திரைப்படம் (Chatha Pacha):
மலையாள சினிமாவில் பிரபல கதாநாயகனாக நடித்துவருபவர் அர்ஜுன் அசோகன் (Arjun Asokan). இவரின் நடிப்பில் தமிழில் ப்ரோ கோட் என்ற திரைப்படமும் தயாராகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் கடந்த 2026 ஜனவரி மாதத்தில் வெளியான திரைப்படம்தான் சத்தா பச்சா. இதில் அர்ஜுன் அசோகன், ரோஷன் மத்தியூ, விஷாகா நாயர் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படமானது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியான நிலையில், இதில் மம்முட்டியும் சிறப்பு வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார். இப்படமானது கடந்த 2026 பிப்ரவரி 19ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது.
கென்னடி திரைப்படம் (Kenaddy):
இந்தி மொழியில் கடந்த 2023ம் ஆண்டில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம் கென்னடி. இப்படத்தை இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர்கள் ராகுல் பட் மற்றும் சன்னி லியோன் இணைந்து நடித்திருந்தனர். அதிரடி ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது தமிழில் ஜீ5 ஓடிடியில் நேரடியாக வெளியாகியுள்ளது.