ராணா மற்றும் பேசில் ஜோசஃபிற்கு போஸ்டர் வெளியிட்டு நன்றி தெரிவித்த பரசக்தி படக்குழு!
Parasakthi Movie: தமிழ் சினிமாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் பராசக்தி. இந்தப் படத்தில் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதற்கு படக்குழு தற்போது நன்றி தெரிவித்துள்ளனர்.

பரசக்தி
தமிழ் சினிமாவில் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி படம். நடிகர் சிவகார்த்தியேகன் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வெளியாகும் திரையரங்குகளில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 25 படங்களுக்காக சிறப்பு வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி இருந்தார். பீரியட் ட்ராமாவாக உருவான இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து உள்ளார். படம் நேற்று 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகின்றது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, குளப்புள்ளி லீலா, பிரகாஷ் பெலவாடி, தேவ் ராம்நாத், பிருத்வி ராஜன், குரு சோமசுந்தரம், சேத்தன், காளி வெங்கட், பாப்ரி கோஷ், ராணா டகுபதி, பசில் ஜோசப், தனஞ்சய என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ராணா மற்றும் பேசில் ஜோசஃபிற்கு நன்றி தெரிவித்த பரசக்தி படக்குழு:
இந்த பராசக்தி படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ராணா டகுபதி மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் பேசில் ஜோசஃப் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்து இருந்தனர். இவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழு தற்போது போஸ்டர் வெளியிட்டு தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
When he came on screen, the theatre went crazy 🔥
Thank you @basiljoseph25 for your special appearance in #Parasakthi. Witness the story in theatres now!#ParasakthiPongal@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff… pic.twitter.com/8m0tDMnH7b
— DawnPictures (@DawnPicturesOff) January 11, 2026
Also Read… ஜன நாயகன் படத்திற்கு யு/ஏ வழங்குமாறு நீதிபதி பி.டி.ஆஷா அளித்த உத்தரவிற்கு தலைமை நீதிபதி அமர்வு தடை
பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
He arrived with lots of confidence 🤟
Thank you @RanaDaggubati for your special appearance in #Parasakthi. Catch it in cinemas now!#ParasakthiPongal@siva_kartikeyan @Sudha_Kongara @iam_ravimohan @Atharvaamurali @gvprakash @DawnPicturesOff @redgiantmovies_ @Aakashbaskaran… pic.twitter.com/Za3pqQNOYp
— DawnPictures (@DawnPicturesOff) January 11, 2026
Also Read… 200 மில்லியன் பார்வைகளை கடந்தது டாக்ஸிக் படத்தில் யாஷின் அறிமுக வீடியோ