இந்தியில் ரீமேக் ஆகும் மோகன்லால் நடிப்பில் ஹிட் அடித்த துடரும் படம்!

Thudarum Movie: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவரது நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது துடரும் படம். இந்தப் படத்தை தற்போது இந்தி சினிமாவில் ரீ மேக் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியில் ரீமேக் ஆகும் மோகன்லால் நடிப்பில் ஹிட் அடித்த துடரும் படம்!

துடரும் படம்

Published: 

07 Dec 2025 20:10 PM

 IST

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகர் மோகன்லால். 65 வயதை உடைய நடிகர் மோகன்லால் தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கு போட்டியாக தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நடிகர் மோகன்லால் நடிப்பில் இதுவரை 4 படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து வெளியான 4 படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாள சினிமாவில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகும் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்து வருவது வழக்கமாக உள்ளது. அதில் குறிப்பாக இந்தி சினிமாவில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் முன்னதாக மலையாள சினிமாவில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற த்ரிஷ்யம் படம் இந்தி சினிமாவிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தற்போது மோகன்லால் நடிப்பில் ஹிட் அடித்த துடரும் படம் தற்போது இந்தி சினிமாவில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு க்ரைம் த்ரில்லர் பாணியில் வெளியானது துடரும் படம். இதில் நடிகர் மோகன்லால் நாயகனாக நடிக்க நடிகை ஷோபனா நாயகியாக நடித்து இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து இந்தப் படத்தில் நடித்து இருந்தது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… ஜாலியாக ஒரு டிடெக்டிவ் படம் பார்க்கனுமா? இந்த தி பெட் டிடெக்டிவ் படத்தை ஓடிடியில் பாருங்கள்

இந்தியில் ரீமேக் ஆகும் மோகன்லால் நடிப்பில் ஹிட் அடித்த துடரும்:

இந்தப் படம் மலையாள சினிமாவில் வெளியாகி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் மோகன்லாலின் ஸ்டண்ட் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இந்த நிலையில் இந்த துடரும் படத்தை இந்தி சினிமாவில் ரீ மேக் செய்ய உள்ளது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த தகவல் சினிமா வட்டாரங்களில் பரவி வரும் நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… நான் மிகப்பெரிய கார்த்தி சார் ரசிகை… ஓபனாக பேசிய கீர்த்தி ஷெட்டி

அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?
மக்களை காக்கும் வவ்வால்கள் - கிராம மக்களின் விசித்திர நம்பிக்கை
உங்கள் அறையின் ஓரத்தில் நிற்பது பேயல்ல. அது ஸ்லீப் பேரலிசிஸ்!
ஏலியனுடன் தொடர்பில் இருந்த ஜார்ஜ் புஷ்? அமேசான் பிரைம் ஆவண படத்தால் சர்ச்சை