ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியானது மைசா படத்தின் கிளிம்ஸ் வீடியோ!

Rashmika Mandanna: கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியானது மைசா படத்தின் கிளிம்ஸ் வீடியோ!

ராஷ்மிகா மந்தனா

Published: 

24 Dec 2025 16:32 PM

 IST

பான் இந்திய அலவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா. இவர் நடிகையாக கன்னட மொழியில் அறிமுகம் அகி இருந்தாலும் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் தான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தெலுங்கு மொழியில் பலப் படங்களில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து பான் இந்திய நடிகையாக வலம் வரத் தொடங்கினார். சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை 5 படங்கள் அடுத்தடுத்து திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி இந்தி மொழியில் மூன்று படங்களும், தெலுங்கு மொழியில் 2 படங்களும் வெளியாகி உள்ளது. அதில் ஒன்று தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் உருவாகி திரையரங்குகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறுவது மட்டும் இன்றி வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி 2024-ம் ஆண்டு வெளியான அனிமல், புஷ்பா 2 ஆகியப் படங்களுடன் இந்த 2025-ம் ஆண்டில் வெளியான சிக்கந்தர் என தொடர்ந்து 3 படங்களும் ரூபாய் 1000 கோடிகள் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் குயின் என்று திரையுலகினர் பாராட்டும் அளவிற்கு வசூலை வாரி குவித்து வருகிறார்.

ரத்தம் சொட்ட சொட்ட வெளியானது மைசா படத்தின் கிளிம்ஸ் வீடியோ:

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் மைசா. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாக உள்ள இந்தப் படத்தை இயக்குநர் ரவீந்திர புல்லே எழுதி இயக்கி வருகிறார். இதுவரை எந்தப் படத்திலும் இல்லாத ஒரு கதாப்பாத்திரத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தின் கிளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Upendra Rao: நான் ரஜினிகாந்த் சாரின் பக்தன்.. கூலி படத்தில் நடித்ததற்கு ஒருபோதும் வருத்தப்படவில்லை – உபேந்திர ராவ் பேச்சு!

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நல்லவளாவே இருக்க முடியாது… லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணு… பிக்பாஸில் கனிக்கு விஜி கொடுத்த மாஸ்டர் ப்ளான்!

கடத்தியவரின் ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தி தப்பித்த இளைஞர் - என்ன நடந்தது?
விமான நிலையங்களில் கைவிடப்பட்ட பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் இளைஞர்
11 மாத வாடகை ஒப்பந்தம் முடிந்தும் வீட்டை காலி செய்ய மறுக்கும் வாடகையாளர்
2026ல் இந்த ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம்.. அதிர்ச்சி தரும் பாபா வங்காவின் கணிப்புகள்..