ஹேப்பி ராஜ் படத்திலிருந்து ஆடினே இருப்பேன் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது!
Happy Raj Movie First Single Update: இசையமைப்பாளர், நடிகர் என தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் ஜிவி பிரகாஷின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஹேப்பி ராஜ். இந்தப் படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை வெளியாக உள்ளது.

ஹேப்பி ராஜ்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிகர்கள் பலர் அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வருவது போல தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திர பாடகராக அறிமுகம் ஆகி தற்போது முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருகிறார். இவர் முதலில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். அதன்படி ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வெளியாகும் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இவரது பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெறுவது மட்டும் இன்றி பல விருதுகளையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பான் இந்திய அளவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசை தமிழ் சினிமாவை பிரபலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இசையமைப்பாளராக பல ஹிட் பாடல்களைக் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார் கடந்த 2015-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான டார்லிங் என்ற படத்தின் மூலமாக நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவர் அறிமுகம் ஆன முதல் படமே மக்களிடையே வரவேற்பைப் பெற்றதை அடுத்து தொடர்ந்து இசையமைப்பது மட்டும் இன்றி படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.
இன்று மாலை வெளியாகிறது ஹேப்பி ராஜ் படத்தின் முதல் சிங்கிள்:
இந்த நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் ஹேப்பி ராஜ். இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா, ஜார்ஜ் மரியன், கீதா கைலாசம் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் மரியா ராஜா இழஞ்சியன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கி வருகிறார். மேலும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு ஆடினே இருப்பேன் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாக உள்ளது. மேலும் இந்தப் பாடலின் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
Also Read… விஜய் சேதுபதி – தியாகராஜன் குமாரராஜா புது பட டைட்டில் இதுதான்… வைரலாகும் அப்டேட்
ஹேப்பி ராஜ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Ready , Set , #Aadineyirupen 😎 All yours from 5PM Today!! 🤩
🎶 @justin_tunes @gvprakash @srigouripriya @actorabbas #GeorgeMaryan #MariaElanchezian @beyondoffcl @jaivarda04 @SureshJaikanth @EditorSelva @kailasam_geetha @madhandop @kumar_gangappan @praveenraja_off @thekbln… pic.twitter.com/OyslGIbVTX
— Saregama South (@saregamasouth) February 17, 2026
Also Read… ரீ ரிலீஸில் போட்டிப் போடும் விஜய் – அஜித் படங்கள்!