அருண் விஜயின் ரெட்ட தல படத்தினை யார் எல்லாம் பார்க்கலாம்? சென்சார் அப்டேட் இதோ
Actor Arun Vijay: தமிழ் சினிமாவில் நாயகன் மற்றும் வில்லன் என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருபவர் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ரெட்ட தல படத்தின் சென்சார் அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

ரெட்ட தல படம்
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆனவர் நடிகர் அருண் விஜய். இவரது தந்தை நடிகர் விஜயகுமார் 60களில் பலப் படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தார். இவரது வாரிசுகளான அருண் விஜய், வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் ஆகியோர் அனைவரும் படங்களில் நடித்து இருந்தனர். இதில் அருண் விஜய் முழு நேரமாக தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஆரம்பகாலத்தில் பெரிய அளவில் இவரது படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த 2000-ம் ஆண்டிற்கு பிறகு நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இந்த 2025-ம் ஆண்டில் மட்டும் இதுவரை வணங்கான் மற்றும் இட்லி கடை ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து இருந்தார். இதில் நடிகர் அருண் விஜய் வணங்கான் படத்தில் நாயகனாகவும் இட்லி கடை படத்தில் வில்லனாகவும் நடித்து இருந்தார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ரெட்ட தல படம்.
அருண் விஜயின் ரெட்ட தல படத்தினை யார் எல்லாம் பார்க்கலாம்?
இந்தப் படத்தை இயக்குநர் கிருஷ் திருக்குமரன் எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜான் விஜய், ஹரீஷ் பேரடி, பாலாஜி முருகதாஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற 25-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read… Jana Nayagan: ஜன நாயகன் படத்தின் வெளிநாடு ப்ரீ-புக்கிங் நிறுத்தம்.. ரிலீஸ் தேதி தள்ளிபோகிறதா?
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#RettaThala Certified U/A
Running Time : 1 hr 54 mins
Trailer from today
December 25th Worldwide Release pic.twitter.com/BvFwJad8Ij— Insplag (@CcInfilmin) December 15, 2025
Also Read… AK64 கார் ரேஸ் படமா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்!