Toxic Movie: யாஷின் டாக்சிக் பட ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா? படக்குழு வெளியிட்ட பதிவு வைரல்!
Toxic Movie Release clarified: தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் யாஷ். கே.ஜி.எஃப் படத்தின் மூலம் பிரபலமான இவர் நடித்துவரும் புதிய படம்தான் டாக்சிக். இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இதற்கு படக்குழு விளக்கம் கொடுத்து பதிவை வெளியிட்டுள்ளது.

யாஷின் டாக்சிக்
நடிகர் யாஷ் (Yash) கன்னட சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். ஆரம்பத்தில் சீரியலில் நடிக்க தொடங்கி பின், வெள்ளித் திரையிலும் ஹீரோவாக நடித்துவந்தார். இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இவருக்கு பான் இந்திய பிரபலத்தை கொடுத்த திரைப்படம்தான் கே.ஜி.எஃப் (KGF). கடந்த 2018ம் ஆண்டில் வெளியான இப்படமானது மக்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. சுமார் ரூ 80 கோடி பட்ஜெட்டில் வெளியான இப்படம், உலகளாவிய வசூலில் ரூ 250 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றிபெற்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக கே.ஜி.எஃப் 2 (KGF 2) படமும் வெளியாகி சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த பிரம்மாண்ட படங்களை தொடர்ந்து யாஷ் நடித்துவரும் படம்தான் டாக்சிக் (Toxic: A Fairy Tale for Grown-Ups). இப்படத்தை பிரபல இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கிவருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், சமீபகாலமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகிவந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமில்லை என்பதைத் தெளிவுபடுத்தும் விதத்தில் டாக்சிக் படக்குழு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த டாக்சிக் படமானது வரும் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதியில் வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்!
ரிலீஸ் தேதி குறித்து விளக்கம் கொடுத்து டாக்சிக் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :
140 days to go…
His Untamed Presence,
Is Your Existential Crisis.#ToxicTheMovie releasing worldwide on 19-03-2026 https://t.co/9RC1D6xLyn— KVN Productions (@KvnProductions) October 30, 2025
இந்த டாக்சிக் படத்தில் யாஷ் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அவருடன் நடிகர்கள் நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுட்ரியா, ருக்மிணி வசந்த், டோவினோ தாமஸ், அமித் திவாரி மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர். இந்த திரைப்படத்தை தளபதி விஜயின் ஜன நாயகன் திரைப்படத்தை தயாரித்துவரும் அதே கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்தான் தயாரித்துவருகிறது.
இதையும் படிங்க: லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கும் பாலிவுட் நடிகை.. அட இவரா?
இந்த படமானது சுமார் ரூ 300 முதல் 350 கோடி பட்ஜெட்டில் தயாராகிவருவதாக கூறப்படுகிறது. யாஷின் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் முதல் படமாக இந்த டாக்சிக் படமானது உருவாகிவருகிறது.
டாக்சிக் படத்தின் ப்ரோமோஷன் எப்போது ஆரம்பம்:
இந்த டாக்சிக் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியநிலையில், இன்னும் 20 சதவீத ஷூட்டிங் மட்டுமே மீதமுள்ளது, அதுவும் வரும் 2025ம் டிசம்பர் மாதத்திற்கு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷனான் எடிட்டிங் , VFX மற்றும் ப்ரோமோஷன் போன்ற பணிகள் எல்லாம் தொடங்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.