பிக்பாஸில் வீட்டுதலையா அமித் பார்கவ் என்ன செய்தார் – அடுக்கடுக்காக புகார்களை வைக்கும் போட்டியாளர்கள்
Bigg Boss Tamil season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 8 சீசன்களாக வீட்டில் வாரம் வாரம் போட்டியாளர்களுக்கு இடையே போட்டி நடத்தில் வீட்டில் கேப்டனை தேர்ந்தெடுப்பார்கள். அந்த கேப்டன் என்ற பெயருக்கு மாற்றாக இந்த சீசனில் வீட்டு தல என்று அழைக்கத் தொடங்கினர்.

பிக்பாஸ்
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தமிழ் சின்னத்திரையில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சிலறை போட்டியாளர்களாக தேர்வு செய்து அவர்களை போட்டியில் கலந்துகொள்ள வைக்கின்றனர். இந்த நிலையில் இதுவரை 8 சீசன்கள் முடிவடைந்து தற்போது 9-வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி முன்னதாக பிக்பாஸ் போட்டியில் வீட்டில் கேப்டன் அழைக்கப்பட்டவர்கள் தற்போது இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து வீட்டு தல என்று குறிப்பிட்டு வருகின்றனர். ஒவ்வொரு வார இறுதியிலும் அந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்வு செய்து அடுத்த வாரத்திற்கான வீட்டு தல டாஸ்க் வழங்கப்படும் அந்த டாஸ்கில் வெற்றிப் பெறுபவர்கள் அடுத்த வாரத்திற்கான வீட்டு தலையாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கடந்த 9-வது வாரம் வீட்டு தலையாக இருந்த ரம்யா ஜோ தனது பதவியை தவறாக பயன்படுத்தியது குறித்து வார இறுதியில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி கேள்வி எழுப்பினார். இப்படி இருக்கும் சூழலில் இந்த 10-வது வாரத்திற்கான வீட்டு தலையாக அமித் பார்கவ் தேர்வாகி இருந்தார். இந்த நிலையில் இன்று சனிகிழமை எபிசோடில் வீட்டு தலையாக அமித் பார்கவ் எப்படி இருந்தார் என்பது குறித்து விஜய் சேதுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமித் மீது அடுக்கடுக்காக புகார்களை வைக்கும் போட்டியாளர்கள்:
இந்த நிலையில் கடந்த வாரம் வீட்டு தலையாக இருந்த ரம்யா ஜோ தனது பதவியை தவறாக பயன்படுத்திய நிலையில் இந்த வாரம் வீட்டு தலையாக இருந்த அமித் பார்கவ் அவரது பதவியை சரியாக பயன்படுத்தவில்லை என்று போட்டியாளர்கள் தொடர்ந்து தங்களது குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கலிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பிக்பாஸில் பார்வதி மற்றும் கம்ருதினை வெளுத்து வாங்கிய விஜய் சேதுபதி – வைரலாகு வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day69 #Promo4 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/jf8CyFqeTo
— Vijay Television (@vijaytelevision) December 13, 2025
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 46 படம்… வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ