Jana Nayagan: லியோவை முந்திய ஜன நாயகன்.. டிக்கெட் முன்பதிவில் சாதனை.. வைரலாகும் பதிவு!
Jana Nayagan Movie Update: தளபதி விஜய்யின் முன்னணி நடிப்பில் வரும் 2026ம் ஆண்டில் வெளியாகி காத்திருக்கும் படம்தான் ஜன நாயகன். இந்த படத்தின் 2வது சிங்கிள் சமீபத்தில் வெளியான நிலையில், இணையத்தின் ட்ரெண்டிங்கில் உள்ளது. அந்த வகையில் இந்த ஜன நாயகன் படமானது வெளிநாடு டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்துள்ளது.

ஜன நாயகன்.
கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் இறுதியாக தி கோட் (The GOAT) திரைப்படம் வெளியான நிலையில், அதனை அடுத்து 2026ல் ரிலீசிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தில் தளபதி விஜய் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, துணிவு மற்றும் வலிமை போன்ற படங்களை இயக்கிய ஹெச். வினோத் (H. Vinoth) இப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த ஜன நாயகன் படமானது அரசியல் திரைப்படமாக அமைந்துள்ளது. இதில் விஜய் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
அனிருத்தின் (Anirudh) இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் தொடர்ந்து இணையத்தில் வெளியிடப்பட்டுவரும் நிலையில், சமீபத்தில் வெளியான “ஒரு பேரே வரலாறு” (oru Pere varalaaru) என்ற பாடல் வெளியாகி சில நிமிடங்களில் 7 மில்லியன் பார்வைகளை கடந்திருந்தது. மேலும் தற்போதுவரை 20 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது வெளிநாட்டு முன்பதிவு (Overseas booking) வசூலில் இந்த ஜன நாயகன் படமானது சாதனை படைத்துள்ளதாம்.
இதையும் படிங்க: சிங்கம் இஸ் பேக்.. போலீஸ் அதிகாரி வேடத்தில் சூர்யா. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ஜன நாயகன் படத்தின் வெளிநாடு டிக்கெட் முன்பதிவு பற்றி வெளியான பதிவு:
12.7K+ TICKETS.
24 HOURS.
RECORD GONE.#JanaNayagan destroys the previous 24-hour ticket sales record of LEO (10K). No noise needed. No explanation required.The name did the work — THALAPATHY.
🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨🧨@actorvijay… pic.twitter.com/Su4BnU2UEA
— Ahimsa Entertainment (@ahimsafilms) December 18, 2025
வெளிநாடு டிக்கெட் புக்கிங்கில் சாதனை படைத்த ஜன நாயகன் :
தளபதி விஜய்யின் நடிப்பில் 2026ல் வெளியாக காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்த படமானது ஒட்டுமொத்த ரசிகர்களிடையேயும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. மேலும் இப்படம் தெலுங்கு படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. மேலும் இது விஜய்யின் இறுதி படம் என்பதால் பெரும் கொண்டாட்டத்துடன் வெளியாக காத்திருக்கிறது. அந்த வகையில் இப்படத்தின் வெளிநாடு டிக்கெட் ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில், லியோ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. அது என்னவென்றால் நேற்று 2025 டிசம்பர் 18ம் தேதியில் இங்கிலாந்தில் இந்த ஜன நாயாகின படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில், வெறும் 24 மணிநேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாம்.
இதையும் படிங்க: ஜேசன் சஞ்சயின் சிக்மா பட ஷூட்டிங் ஓவர்.. முதல் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
இதுவரை மொத்தம் 12,700 டிக்கெட்டுகள் ஒரே நாளில் விற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் லியோ படம் டிக்கெட் முன்பதிவு தொடங்கி 24 மணிநேரத்தில் 10,000 டிக்கெட்டுகள் விற்ற நிலையில், அதைவிடவும் 2,700 டிக்கெட்டுகள் அதிகமான ஜன நாயகன் படம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான பதிவு இணையத்தில் வைரலாகிவருகிறது.