Prabhas : விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ படத்தைப் பாராட்டிய பிரபாஸ்!

Prabhas Praised Thalaivan Thalaivii Movie : தென்னிந்தியப் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவரின் முன்னணி நடிப்பில், தமிழில் வெளியாகியிருந்த படம் தலைவன் தலைவி. இப்படமானது தெலுங்கில் சார் மேடம் என்ற பெயரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படக்குழுவிற்கு நடிகர் பிரபாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prabhas : விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படத்தைப் பாராட்டிய பிரபாஸ்!

தலைவன் தலைவி படத்தை பாராட்டிய பிரபாஸ்

Published: 

01 Aug 2025 21:34 PM

கோலிவுட் முன்னணி இயக்குநர்களில் ஒருவர்தான் பாண்டிராஜ் (Pandiraaj). இவரின் முன்னணி இயக்கத்தில் 2 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகியிருந்த திரைப்படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த படமானது ஆரம்பத்தில் விஜய் சேதுபதியின் (Vijay Sethupathi) 51வது திரைப்படமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் (Nithya Menen) நடித்திருந்தனர். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் (Santhosh Narayanan) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து “பொட்டல முட்டையே” என்ற பாடலானது தற்போது வரையிலும் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த படமானது கடந்த 2025, ஜூலை 25ம் தேதி முதல் தமிழில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.

இதைத் தொடர்ந்து தெலுங்கிலும் இப்படமானது டப் செய்யப்பட்டு, வரும் 2025, ஆகஸ்ட் 1 ஆம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் , இப்படத்தின் தெலுங்கு ட்ரைலரை பார்த்த நடிகர் பிரபாஸ் (Prabhas) , இப்படக்குழுவினருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ‘சர்தார் 2’ படக்குழுவிற்கு ஸ்பெஷல் விருந்து வைத்த கார்த்தி.. வைரலாகும் வீடியோ!

தலைவன் தலைவி படத்தை பிரபாஸ் பாராட்டிய பதிவு :

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நடிகர் பிரபாஸ் , சார் மேடம் (Sir Madam) படத்தின் ட்ரெயிலரை பார்த்ததாகவும், இந்த படம் நிச்சயமாகப் பார்க்கவேண்டிய படம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படமானது வெற்றிபெறுவதற்காகத் தனது அன்பையும், வாழ்த்துகளையும், அதில் கூறியுள்ளார். நடிகர் பிரபாஸின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியானது தற்போது வைரலாகி வருகிறது. மேலும் சார் மேடம் படக்குழுவும், இதைக் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிங்க : சித்தார்த்தின் ‘3BHK’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்.. எப்போது, எங்குப் பார்க்கலாம்?

தலைவன் தலைவி திரைப்படத்தின் தெலுங்கு வெளியீட்டு :

இந்த தலைவன் தலைவி படமானது தமிழில், கடந்த 2025, ஜூலை 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது.. வெளியான நான்கு நாளிலே சுமார் ரூ 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இந்த திரைப்படமானது சாதனை படைத்திருந்தது . வெளிநாடுகளில் மட்டும் நான்கு நாட்களில் சுமார் ரூ 10 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது தமிழைத் தொடர்ந்து தெலுங்கு மொழியிலும் வெளியாகவுள்ளது.

இப்படமானது தெலுங்கில் சார் மேடம் என்ற பெயரில், வரும் 2025, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வெளியாகவுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தற்போது தெலுங்கில் கதாநாயகனாகப் படத்தில் நடித்துவரும் நிலையில், அதற்கு முன்னோட்டமாக இந்த தலைவன் தலைவி திரைப்படமானது தெலுங்கில் வெளியாகவுள்ளது. இந்த படமானதும் தமிழ் மக்களைத் தொடர்ந்து தெலுங்கு மக்கள் மத்தியிலும் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.