ஜன நாயகன் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்தது இதுதான் – நடிகர் டீஜே சொன்ன விசயம்

Actor Teejay: தமிழ் சினிமாவில் ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் நடிகர் டீஜே அருணாச்சலம். இலங்கை தமிழரான இவர் லண்டனில் வளர்ந்துள்ளார். தமிழில் பல ஆல்பம் பாடல்களை எழுதி இசைமைத்து தானே பாடி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இவர் தற்போது நடிகராக வலம் வருகிறார்.

ஜன நாயகன் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் நடந்தது இதுதான் - நடிகர் டீஜே சொன்ன விசயம்

நடிகர் டீஜே

Published: 

30 Jul 2025 13:58 PM

கோலிவுட் சினிமாவில் தற்போது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் நடிகர் விஜயின் (Actor Vijay) ஜன நாயகன் படம். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தமிழ் ரசிகர்கள் மட்டும் இன்றி மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் அதிகரித்து காணப்படுகின்றது. காரணம் நடிகர் விஜய் தமிழக அரசியலளில் தீவிரமாக களமிறங்க முடிவு செய்ததால் இனி படங்களில் நடிக்க மாட்டேன் தனது 69-வது படமான ஜன நாயகன் படம் தான் இறுதி என்று தெரிவித்து இருந்தார். இதனால் பல கோடி ரசிகர்களை வைத்து இருக்கும் விஜய் இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளார். இனி இவர் படங்களில் நடிக்க மாட்டார் என்ற காரணத்தினாலேயே அவரது இறுதிப் படமான ஜன நாயகன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பெறும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் ஜன நாயகன்:

நடிகர் விஜய் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இவர்களின் கூட்டணி முன்னதாக பீஸ்ட் படத்தில் அமைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸ்ஸி, பாபா பாஸ்கர், டீஜய் அருணாசலம், ரேவதி, இர்பான் ஜைனி, ஸ்ரீநாத், நிழல்கள் ரவி, அருண் குமார் ராஜன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பிரபல தயாரிப்ப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வரும் நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ஜன நாயகன் படத்தில் அசுரன் படம் குறித்து விஜயிடம் பேசிய டீஜே:

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ள நடிகர் டீஜே சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் முதல் நாள் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து பேசியுள்ளார். அதில் முதல் நாள் ஷூட்டிங்கிள் உக்காரக் கூட சேர் இல்லாமல் ஓரமாக தூணை கட்டிப்பிடித்தப்படி நின்றுக்கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு குரல் ப்ரோ இங்க வந்து உக்காருங்கனு. ப்ரோவா யாருன்னு திரும்பி பாத்தா விஜய் சார். நானா என்று கேட்டேன் ஆமா வந்து உக்காருங்கனு அவரு பக்கத்துல காலியா இருந்த சீட்ல உக்கார சொன்னார். நானும் போய் உக்காந்தேன். அவரும் பேச ஆரம்பிச்சார். என்ன படம் நடிச்சீங்கனு கேட்டார் நான் அசுரன் சொன்னேன்.

Also Read… இதனால்தான் எனது குடும்ப வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்கிறேன் – லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்

அசுரனா அதுல என்னு கேட்டப்போ நான் அவரிடம் சொல்ல ஆரம்பித்தேன். இந்தப் படத்தில் என் லுக் டோட்டலா வேறையா இருந்ததால அவரால கண்டுபிடிக்க முடியல. அப்பரம் 20 நிமிஷம் அசுரன் படம் பத்தியே பேசிட்டு இருந்தோம். அவரும் நிறைய கேட்டாரு நானும் முதல் நாள் தயங்கி தயங்கி பேசிட்டு இருந்தே. அப்பறம் ஷூட்டிங் முடியும் போது நான் தான் பேசிட்டே இருந்தேன் அவர் கேட்டுட்டே இருந்தார் என்று கலகலப்பாக டீஜே தெரிவித்துள்ளார்.

இணையத்தில் கவனம் பெறும் டீஜே பேசிய வீடியோ:

Also Read… படம் நல்லா இல்லனாலும் பெரிய நடிகர் நடிச்சா கமர்ஷியல் படம் ஹிட் அடிக்கும் – லோகேஷ் கனகராஜ்!

Related Stories
இன்ஸ்டாவில் 8.5 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் ஃபாலோ செய்யும் ஒரே ஒரு நபர் – யார் தெரியுமா
Madharaasi : சாய் அபயங்கரின் குரலில்.. சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திலிருந்து ‘சலம்பல’ என்ற பாடல் வெளியானது!
Vijay Deverakonda Speech : ‘உங்கள் அன்பினால் இந்த வெற்றி’ – கிங்டம் பட வெற்றி விழாவில் விஜய் தேவரகொண்டா பேச்சு
Karthi : ‘சர்தார் 2’ படக்குழுவிற்கு ஸ்பெஷல் விருந்து வைத்த கார்த்தி.. வைரலாகும் வீடியோ!
நடிகர் நானியின் நடிப்பில் வெளியான ஜெர்சி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
தெறி படத்தின் ஷூட்டிங்கில் நைனிகா நடிப்பைப் பார்த்து விஜய் அசந்துட்டார் – நடிகை மீனா!