அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெல்லியில் உள்ள இந்தியா கேட் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, அதனை அழகான வெற்றிச் சின்னம்” என்று புகழ்ந்துள்ளார். அந்த பதிவில், இந்தியாவின் அழகான வெற்றி பாதை, எங்களிடம் உள்ள அனைத்திலும் சிறந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வெளியாகியிருக்கும் நேரத்தில், அமெரிக்கா சுதந்திரமடைந்த 250வது ஆண்டு விழாவை நினைவுகூரும் வகையில், வாஷிங்டன் டிசியில் மிகப்பெரிய புதிய வெற்றிப் பாதை ஒன்றை அமைக்க டிரம்ப் திட்டமிட்டு வருகிறார்.